இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா?

தயிரில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை இருப்பதால் உடலில் கபம் அதிகரிக்கும்.  உடலில் கபம் அதிகரிக்கும்போது சுவாச கோளாறுகள் ஏற்படும்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 08, 2019 13:33 IST

Reddit
Is it Safe to Have Curd (Dahi) at Night?
Highlights
  • தயிரில் செரிமானத்தை அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கிறது.
  • தயிர் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடைகிறது.
  • ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இரவு நேரத்தில் தயிரை தவிர்ப்பது நல்லது.

இந்திய உணவுகளில் தயிர் மிகவும் முக்கியமானது.  சில ரெசிபிகளில் தயிர் சேர்க்கப்படுகிறது.  தினமும் தயிர் இல்லாமல் சிலர் சாப்பிடவே மாட்டார்கள்.  தயிரில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது.  தயிரில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை சீராக்குவதுடன் குடல் இயக்கங்களையும் சீராக்குகிறது.  பால் குடிக்க பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம்.  தயிரை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடைகிறது.  உடல் சூட்டை தணிக்க தினமும் தயிர் சாப்பிடலாம்.  மேலும் தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்கும்.  இருதய ஆரோக்கியத்தை காக்க தயிருக்கு முக்கிய பங்கு உண்டு.   இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தயிரை இரௌ நேரத்தில் சாப்பிடலாமா என்பது குறித்து பார்ப்போம்.   

ஆயுர்வேத குறிப்புகளின்படி, நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், சாப்பிடும் நேரத்தையும் பொருத்துதான் உடல் ஆரோக்கியம் அமையும்.  மேலும் உடல் உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்கும்.  yogurt

தயிரில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை இருப்பதால் உடலில் கபம் அதிகரிக்கும்.  உடலில் கபம் அதிகரிக்கும்போது சுவாச கோளாறுகள் ஏற்படும்.  இரவு நேரத்தில் உடலில் வெப்பநிலை மாறுபட்டிருக்கும்.  இந்த நேரத்தில் தயிர் சாப்பிடுவதால் உடலில் சளி அதிகபடியாக உற்பத்தியாகி உடல் உபாதைகள் ஏற்படும்.  அப்படியானால் இரவு நேரத்தில் முற்றிலுமாக தயிரை தவிர்த்திட வேண்டுமா என்பது தானே உங்கள் கேள்வி? அதற்கு சில ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.  

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதால் செரிமானம் சீராக இருக்கும்.  ஆனால் ஆஸ்துமா மற்றும் இருமல் போன்ற பிரச்னை இருப்பவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது.  ஏனென்றால் இவை உடலில் சளியை அதிகரிக்க செய்யும்.  தயிரில் வெந்தயம் சேர்த்தும் சாப்பிடலாம்.  இது செரிமான கோளாறுகளை போக்கும்.  Listen to the latest songs, only on JioSaavn.com

curd

தயிர் சாப்பிட பிடிக்காதவர்கள் மோராக குடிக்கலாம்.  மோரில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.   மோருடன் 1/4 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம்.  மிளகு உடலில் வெப்பத்தை உண்டாக்கும் என்பதால் சளி தொல்லை இருக்காது.   

buttermilk 620x350

சளி தொல்லை இல்லாதவர்கள் தயிரில் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.  அத்துடன் வெள்ளரி, பூசணிக்காய் ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement