சைவ பிரியர்கள் நிச்சயம் பலாப்பழம் உண்ண வேண்டும்

சைவ உணவு பிரியர்களை பலாப்பழத்தை, அசைவ உணவு பிரியர்கள் மாமிசம் சாப்பிடும் அளவு சாப்பிட வேண்டும் என்கிறார்கள்

Ashwin Rajagopalan  |  Updated: December 11, 2018 08:00 IST

Reddit
Jackfruit Recipes: Raw Jackfruit Is The Toast Of Vegans In The West

சைவ உணவு பிரியர்களை பலாப்பழத்தை, அசைவ உணவு பிரியர்கள் மாமிசம் சாப்பிடும் அளவு சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

ஐரோப்பா, அமேரிக்கா வீகன் வகை உணவு உண்பவர்களுக்கு சமீபத்தில் பலாப்பழத்தின் அதிக மோகம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் சொல்கிறது. அமேரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பலாப்பழத்தினால் செய்யப்படும் உணவுகள் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள். இதனால் தானோ என்னவோ இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பலாப்பழங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்தியாவில் கூட பலாப்பழம் உண்பவர்கள் எண்ணிக்கை கூட அதிகரித்து இருக்கிறதாம். கூர்க்கில் பலாப்பழம் கொண்டு காதல் பிரியாணி செய்யப்படுகிறது. மாமிசத்துக்கு பதிலாக பிரியாணியில் பலாப்பழம் போட்டு செய்வார்கள். பலாப்பழம் கொண்டு செய்யப்படும் மூன்று உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறோம்

பெங்காலில் செய்யப்படுவது. ஹில்டன் ஹோட்டலில் செப் பிஸ்வாஜித் அவர்கள் சொன்ன ரெஸிப்பி-

தேவையானவை-

 • பலாப்பழம்- 250கி
 • கடுகு எண்ணெய்- 30கி
 • கடுகு-15கி
 • சீரகம்- 15கி
 • பச்சை மிளகா- 20கி
 • தனியா தூள் – 15கி
 • உருளைக் கிழங்கு- 30கி

செய்முறை-

 1. பலாப்பழ தோலை சீவி அதனை மஞ்ச தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும்,
 2. எண்ணெய்யை தனியாக ஒரு பானில் வைத்து கொதி விடவும்
 3. சீரகம், கடுகு கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு வதக்கவும்
 4. இப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
 5. அதில் பலாப்பழத்தை கொதிக்க வைத்த உருளைக் கிழங்கு சேர்த்து கொதி விடவும்.
 6. அது பதமான பின் மக்கா சோழம் தூவி நன்கு சுடாக இருக்கும் போதே பரிமாறிவிடவும்.
h0ls0lj

பாலப்பழ மீன் பிரியாணி-

கேரளா ஸ்பெஷல்

தேவையானவை-

 • பலாப்பழம்- 500 கி
 • மீன் சிறு துண்டுகள்—300கி
 • அரைத்த பச்சை மிளகாய்- 25கி
 • உப்பு- 20கி
 • அரைத்த இஞ்சி- 15கி
 • அரைத்த பூண்டு-15கி
 • தேங்காய் எண்ணெய்- 100மிலி
 • கருவேப்பில்லை- 20கி
 • கொத்தமல்லி- 15கி
 • புதினா-15கி
 • மிளகு தூள்-15கி
 • மஞ்ச பொடி-15கி
 • வறுத்த முந்திரி- 100கி
 • வறுத்த வெங்காயம்- 50கி
 • அரைத்த தேங்காய்- 50கி
 • பினல் பவுடர்- 8கி

செய்முறை-

 1. மீனில் மசாலா பூசவும்.
 2. ஒரு பேனில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
 3. பலாப்பழம், தேங்கா\ய், மிளகு, பினல் பவுடர், உப்பு, மஞ்சுள் போடவும்.
 4. வேக வைத்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி, முந்திரி கலந்து பரிமாறவும்.
g9uqbv48

ஃபுல்ட் பாலப்பழ பர்க்கர்-

பெங்களூருவில் மிகவும் பிரபலமானது

தேவையானவை-

 • பாலப்பழம்- 75கி
 • பார்பிக்குயூ சாஸ்- 50கி
 • தேன் 5கி
 • பூண்டு- 2/3
 • கீரை- 25கி
 • பன் -1
 • கோஸ்- 20கி
 • கேரட்-10கி
 • தயிர்-50கி
 • உப்பு மற்று மிளகு தேவைக்கேற்ப.

செய்முறை-

Comments

 1. நன்கு நறுக்கப்பட்ட கோஸ், வெங்காயம், கேரட், தயிரில் போட்டு கலக்கவும்.
 2. உப்பு மிளகு போட்டு தனியாக வைத்து கொள்ளவும்.
 3. வேக வைத்த பலாப்பழம், பார்பிகுயூ சாஸ் போட்டு உப்பு மிளகு போட்டு பேஸ்ட்டாகி கொள்ளவும்.
 4. பன்னை நறுக்கி உள்ளே இதனை போட்டு கீரை, உப்பு போட்டு பரிமாறவும்.
ng8jlek


About Ashwin RajagopalanI've discovered cultures, destinations and felt at home in some of the world's most remote corners because of the various meals I've tried that have been prepared with passion. Sometimes they are traditional recipes and at most times they've been audacious reinterpretations by creative chefs. I might not cook often but when I do, I imagine I'm in a cookery show set - matching measuring bowls, et all!

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com