ஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்ற ஜூஸ் வகைகள்

முகத்திற்கு வெளியே பயன்படுத்தும் பொருட்கள் போலவே நாம் உண்ணும் உணவுகளும் நம் சருமத்திற்கு அதிக மாற்றங்களை கொடுக்கும்

   |  Updated: June 04, 2018 12:54 IST

Reddit
Juices For Glowing Skin: 9 Elixirs To Drink Up For A Healthy Skin!
பெரும்பாலும் அனைவருக்கும் இளமையான பொலிவான முகம் வேண்டும் என்றுதான் ஆசை இருக்கும். அதற்காக பல அழகு சாதனப்பொருட்களை கடையில் வாங்கி நாம் பயன்படுத்தியது உண்டு. ஆனால் நம் சமையல் அறையில் இருந்தே நம் சருமத்திற்கான முக பொலிவுக்கான பொருட்களை எடுக்கலாம் என உங்களுக்கு தெரியமா? முகத்திற்கு வெளியே பயன்படுத்தும் பொருட்கள் போலவே நாம் உண்ணும் உணவுகளும் நம் சருமத்திற்கு அதிக மாற்றங்களை கொடுக்கும். அந்த வகையில் உங்கள் சருமம் பொலிவாக்க நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஜூஸ்கள் இவை தான்.

நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்கள் 

1. கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட்டில் பொட்டாசியம், ஜிங், இரும்பு சத்து , ஃபோலிக் அமிலம், மெக்னிசியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவை அனைத்தும் ரத்தத்தை சுத்தம் செய்து, சரும பொலிவையும் தருகிறது. கேரட்டில் வைட்டமின் எ இருப்பதால்முகப்பரு, சுருக்கங்கள்,  சீரற்ற தோல் வராமல் பாதுக்காக்கும். 

 ​
beetroot and carrot juice

2. வெள்ளரிக்காய் ஜூஸ் 

வெள்ளரி உங்கள் சருமத்தை உலர விடாமல் இரப்பத்ததுடன் வைத்திருக்க உதவும். இதில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் ஈரப்பதத்தை தக்க வைத்து உங்கள் முகத்திற்கு பொலிவை தரும்.

cucumber juice

3. தக்காளி ஜூஸ் 

தக்காளியில் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது, இது முகத்தில் சுருக்கம் வராமல், விரைவில் முகம் வயதடையாமல் பார்த்துக்கொள்ளும். தினமும் தக்காளி ஜூஸை எடுத்து வந்தால் முக துலைகளை குறைத்து, முகம் பொலிவாக புத்துணர்வாக இருக்க உதவும். 
 
tomato juice

4. கீரைகள் 

கீரைகள் நமக்கு பிடித்த உணவு பட்டியலில் நிச்சியம் இருக்காது. ஆனால் இதில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து இருப்பதால்  நிச்சியம் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக அமையும். மேலும் இந்த கீரைகளில் வைட்டமின் சி, ஈ மற்றும் மேக்நிசியாம் இருப்பதால் உங்கள் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கும்.

 
spinach 630x350

5. கற்றாழை 

Listen to the latest songs, only on JioSaavn.com

கற்றாழை சருமத்திற்கு மட்டுமல்ல முடியிக்கும் ஏற்றது. மினரல் மற்றும் வைட்டமின் சத்து கற்றாழையில் அதிகமாக இருப்பதால் இயற்கையான பொலிவை சருமத்திற்கு தரும். 
 

aloe vera juice

6. இஞ்சி எலுமிச்சை ஜூஸ்

இஞ்சியில் பொட்டாசியம் மற்றும் நியாசின் இருப்பதால் சருமத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும். ஆரோக்கியம் மற்றும் பொலிவான சருமம் வெறும் இஞ்சியில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. சுவைக்காக இஞ்சி சாறுடன் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையை  சேர்த்துக்கொள்ளுங்கள் 
 

lemon juice 620

7. ஆப்பிள் ஜூஸ் 

Commentsநாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம் என சும்மாவா சொன்னார்கள்? ஆப்பிள் உங்கள் உடலின் முழு ஆரோக்கியத்தை பார்ப்பதோடு முகம் சுருக்கம் அடையாமலும், பொலிவுடனும் இருக்க செய்கிறது. 
 

apple juice


இந்த ஜூஸ்களை பருகி உங்கள் சருமத்தை மெருகேறுங்கள் 


 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement