ஞாபகத்திறனை மழுங்க செய்யும் துரித உணவுகள்!!

துரித உணவுகள் சுவையாக இருக்க வேண்டுமென்று சுவையூக்கிகள் சேர்க்கப்படுகிறது.  இவை நாவின் சுவை மொட்டுகளை செயல் இழக்க செய்வதோடு மூளை செயல்பாடுகளையும் சீர்குலைக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 22, 2019 12:40 IST

Reddit
Diet Rich In Junk Food May Negatively Impact Spatial Memory: Study

நம் ஞாபகத்திறன் பல காரணம் மற்றும் காரணிகளால் காலப்போக்கில் பாதிக்கப்படுகிறது.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை பொருத்தும் இது அமையும்.  நம் மூளையில் வெவ்வேறு விதமான ஞாபகத்திறன்கள் உண்டு.  நினைவாற்றல் மற்றும் ஞாபகத்திறன் இரண்டிற்குமே தொடர்புண்டு.  துரித உணவுகளையே தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ஞாபகத்திறன் குறையும் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  நாம் இருக்கக்கூடிய இடம், நம்மை சுற்றி இருக்கக்கூடியவை, நாம் இருக்கக்கூடிய நிலை ஆகியவற்றை ஞாபகத்தில் இருக்குமானால் அதன் பெயரே ஸ்பாஷியல் மெமரி என்று சொல்லப்படுகிறது. 

அதிகபடியான கலோரிகள், சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகள் துரித உணவுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, ஞாபகத்திறனும் பாதிக்கப்படுகிறது.  தொடர்ச்சியாக சிப்ஸ், பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதனால் ஞாபகத்திறனில் பாதிப்பு ஏற்படும்.  எலிகளை கொண்டு ஆறு வாரங்கள் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில் தொடர்ச்சியாக துரித உணவுகள் கொடுக்கப்பட்ட எலிகளின் ஞாபகத்திறன் முழுவதுமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

ஆகையால் துரித உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.  துரித உணவுகள் சுவையாக இருக்க வேண்டுமென்று சுவையூக்கிகள் சேர்க்கப்படுகிறது.  இவை நாவின் சுவை மொட்டுகளை செயல் இழக்க செய்வதோடு மூளை செயல்பாடுகளையும் சீர்குலைக்கிறது.  துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement