விந்தணு குறைபாட்டை உண்டாக்கும் துரித உணவுகள்!!

பீட்சா, பர்கர், சிப்ஸ் போன்ற துரித உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, உடல் பருமன் போன்ற உடல் உபாதைகளும் வாழ்வியல் பிரச்சனைகளும் உண்டாகும்.

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 26, 2019 12:51 IST

Reddit
Junk, Processed Foods Linked With Lower Sperm Count In Young, Fit Men: Study

பீட்சா, பர்கர், சிப்ஸ் போன்ற துரித உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, உடல் பருமன் போன்ற உடல் உபாதைகளும் வாழ்வியல் பிரச்சனைகளும் உண்டாகும்.  இது தவிர இந்த உணவுகள் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்குமே மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இதுபோன்ற உணவுகளால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுகிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் ஆண்களை காட்டிலும் துரித உணவுகளை உட்கொள்ளும் ஆண்களும் விந்தணு எண்ணிக்கையில் சிக்கல் ஏற்படுகிறது.  மேலும் இந்த உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கிறது.  

Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், ஸ்டார்சி கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்ட சிலரை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு  விந்தணு குறைபாடு இருப்பதை ஐக்கிய நாடுகளில் இருக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.  இதில் குறிப்பாக இளம் வயது ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால் மீன், கோழி, பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வது மற்றும் நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை இல்லாமல் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.  

அதேசமயம், சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்களை காட்டிலும், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு விந்தணு குறைபாடு இல்லாததும் தெரிய வந்துள்ளது.  சிறு வயதில் இருந்தே ஊட்டச்சத்து குறைபாடு, சீரற்ற ஹார்மோன் சுரப்பு போன்ற பிரச்சனை உள்ள ஆண்களுக்கே விந்தணுவில் குறைபாடு ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement