முட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்!

மஞ்சள் கருவை சாப்பிடுபவரா நீங்கள். வைட்டமின் A, D மற்றும் கால்சியம் மற்று இரும்புச்சத்து நிறைந்த மஞ்சள் கருவை இப்படியும் பயன்படுத்தலாம்

   |  Updated: March 21, 2019 18:27 IST

Reddit
Just Yolking! 6 Ways Of Using Leftover Egg Yolks In Cooking And Baking
Highlights
  • It's a huge waste to throw egg yolks away
  • Egg yolks can be used for thickening pasta sauces and soups
  • Egg yolks can be used for glazing pastries to make them appear shiny

நம்மில் பலர் உடல் எடை காரணமாக முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்கிவைத்து விடுவார்கள். காரணம் மஞ்சள் கருவில் அதிகமாக இருக்கும் கொழுப்புதான். அது ரத்தத்தில் கொழுப்பை சேர்த்து பிரச்னையை தரும் என்பதால் பல ஊட்டச்சத்து நிபுணர்கள்கூட அதையே சிபாரிசு செய்கின்றனர். காலை உணவாக முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டுமே சாப்பிடுவதால் மஞ்சள் கரு பயன்படாமல் இருக்கும். அதைக் குப்பையில் கொட்டவும் முடியாமல் சிரமமாக இருக்கும். மஞ்சள் கருவை சாப்பிடுபவரா நீங்கள். வைட்டமின் A, D மற்றும் கால்சியம் மற்று இரும்புச்சத்து நிறைந்த மஞ்சள் கருவை இப்படியும் பயன்படுத்தலாம்....

5gc64r1 

1. மயோனைஸ் 

மயோனைஸ் செய்வதற்க்கு ஒரு முக்கியப் பொருளாக இருப்பது மஞ்சள் கரு. மயோனஸை நாம் கிரில் சிக்கன், சாண்விச், பர்கர் என பல உணவுகலோடு சேர்த்து சாப்பிட விரும்பிகிறோம். மீதமிருக்கும் மஞ்சள் கருவை சேகரித்து வீட்டிலேயே சுவையான ஆரோக்கியமான மயோனைஸை செய்து சாப்பிடலாம்.

2. பாஸ்தா சாஸ் மற்றும் சூப்

நீங்கள் வைத்த கிரேவி தண்ணியாக இருக்கிறதா? கவலை வேண்டாம், அதில் மீதமிருந்த இந்த மஞ்சள் கருவை சேர்த்து கலக்கினால் கெட்டியான கிரேவி தயார். அதேபோல பாஸ்தாவிலும் சேர்த்து சுவைக்கலாம். தண்ணீர் மற்றும் அதிக கொழுப்பு இருப்பதால், சூப்பைக் கெட்டியாக்கவும் மஞ்சள் கருவை பயன்படுத்தலாம். 

3. புட்டிங் மற்றும் கஸ்டர்ட்ஸ்

புட்டிங் மற்றும் கஸ்டர்ட்ஸ் செய்வதில் மஞ்சள் கரு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வகை ரெசிப்பிகளை கெட்டியாகவும் கிரீமியாகவும் வைத்து உங்களை விரும்பி சாப்பிட வைக்கிறது. 

l6oadp1 

4. மின்ஸ்டு மீட்

பர்கருக்கு கெட்டியான மின்ஸ்டு மீட் தேவையா? அத்ற்கு நீங்கள் மஞ்சள் கருவைப் பயன்படுத்துங்கள். இறைச்சியுடன் சீஸ், சேர்க்கும் போது மஞ்சள் கருவை சேர்த்தால் நல்ல ஃப்ளேவர் கிடைக்கும். கெட்டியாக இருக்கும்.

5.  ஃப்ளஃப்பி ப்ரெட்ஸ் மற்றும் எக் வாஷ்

பிரெட்கள் மிருதுவாக வருவதற்க்கு முட்டை கலக்கப்படுகிறது. மஞ்சள் கருவை சேர்த்து வீட்டிலேயே பிரெட் செய்தால் நன்றாக இருக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

jj2cbr4g 

6. க்ரீமி கப்கேக்

கப்கேக் செய்யும்போது முட்டையின் மஞ்சள்கருவை நன்றாக அடித்து கலவையில் சேர்த்தால், கேக் சாஃப்ட்டாகவும் சுவையாகவும் இருக்கும். அதோடு ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் தேவையான அளவு புரதமும், சக்தியும் கிடைக்கும்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement