மழைக்கால நோய்த்தொற்றுகளை போக்க வீட்டு வைத்தியங்கள்

Sarika Rana  |  Updated: July 16, 2018 17:03 IST

Reddit
Kadha For Monsoon: Fight Infections With Natural Ingredients This Rainy Season
Highlights
 • மழைக்காலம் நம்மை பல்வேறு விதமான நோய்த்தொற்றுக்களுக்கு ஆளாக்குகிறது
 • கதா எனும் வைத்தியத்தில் ஏலக்காய், கிராம்பு, ஜீரா பயன்படுத்தப்படுகின்றன
 • கசாயம் என்கிற ஆயுர்வேத பானம் மூக்கடைப்பை நீக்க பயன்படுத்தப்படுகிறது

இந்திய வீடுகளில், அன்றாடம் சமையலில் பல்வேறு மசாலா மற்றும் மூலிகைகள் நிரம்பி இருக்கின்றன. சில வேளைகளில் இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படும், மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கி, கடினமான ஈரப்பதத்தையும் உடன் அழைத்து வந்திருக்கிறது. மழைக்காலங்களில் எதிர்ப்புசக்தி குறைந்து விடுவதால் தொற்று, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வரக்கூடும். இந்த சமயங்களில் மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் இயற்கை மருந்தாகவும், பானமாகவும் நம்முடைய உடல் தொற்றை எதிர்த்து தாக்குபிடிக்க வலுப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. கதா எனும் மூலிகை பானத்தில், பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் நீண்ட நேரத்திற்கு தண்ணீரில் கொதிக்க வைக்கப்பட்டு, அதனுடைய நல்ல மருத்துவ குணங்கள் அனைத்தும் சாறாக எடுக்கப்படுகிறது. எந்த மூலிகை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது, பாதிக்கப்பட்டிருக்கும் நோயை பொருத்து முடிவு செய்யப்படுகிறது. இதன் சுவை உங்களை ஈர்க்கவில்லையென்றாலும் மழைக்காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

ஆயுர்வேத நிபுணர் டாக்டர். ராம் என் குமார், அவர்கள் கூறுவதாவது, “ பருவமழைக் காலங்கள் தான் நம்மை பல நோய்களுக்கு ஆளாக்குகிறது. ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் நம்மை மாறுகின்ற பருவங்களுக்கு ஏற்றவாறு ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மழைக் காலங்களில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் எளிதாக பரவுகிறது, கதா எனும் சில மூலிகைகளால் தயாரிக்கப்படும் ஒரு ஆயுர்வேத பானம் பல்வேறு மருத்துவப் பிரச்சனைகளிலிருந்தும் விலக்கி வைக்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கதா தயாரிக்க ஏலக்காய், கிராம்பு, ஜீரா, இஞ்சி, அதிமதுரம், துளசி, தேன் மற்றும் வெல்லம் போன்ற பல்வேறு சமையல் பொருட்களை பயன்படுத்தப்படுகிறது.

herbal water

டாக்டர் குமார் அவர்கள் பரிந்துரைக்கும் வீட்டு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் மூலம் தயாரிக்கப்படும் இரண்டு மழைக்கால சிறப்பு இயற்கை மருந்துகள், உங்களை குணப்படுத்தி ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.

 • அமிழ்தவள்ளி ஜூஸ்: இது அனைத்து வகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. குடுச்சி எனும் பொருள் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பானம். அமிழ்தவள்ளி ஜூஸ், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்த தட்டுக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

 • துளசி - கிலாய் மருந்து: துளசி மற்றும் கிலாய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, குறிப்பாக ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஆகியவை வருவதை தடுக்க உதவும் சிறப்பு ஆயுர்வேத மருந்தை தயாரிக்க பயன்படும் அற்புதமான கலவை. இந்த மருந்து காய்ச்சல் தொடர்ந்து வருகின்ற சூழல்களிலும் உதவும்.

herbs
 

துளசி மற்றும் கரும் மிளகு மருந்து செய்ய தேவையான பொருட்கள்:

 • 2 கப் தண்ணீர்

 • 1 தேக்கரண்டி சர்க்கரை

 • 1 தேக்கரண்டி நன்கு நசுக்கிய கரும் மிளகு

 • 1 தேக்கரண்டி நன்கு வெட்டப்பட்ட இஞ்சி

 • 1 தேக்கரண்டி நெய்

 • ஒன்று அல்லது இரண்டு கிராம்பு

 • ஒரு சில துளசி இலைகள்

செய்முறை:

 1. கடாயில் நெய்யை காய்ச்சி, சிறிது கிராம்பு, கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் துளசி சேர்க்கவும்.

 2. பொருட்களை நன்றாக தாளித்த பிறகு, தண்ணீர் மற்றும் சர்க்கரை சேருங்கள்.

 3. இந்த கலவையை மிதமான தீயில் 15 - 20 நிமிடங்களுக்கு சமைத்து, அவ்வப்போது கிளறிவிட மறந்து விடாதீர்கள்.

 4. சில துளசி இலைகளை சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும்.

 5. அதிகபட்ச நன்மைகள் பெற இந்த மருந்தை சூடாக தினசரி இரண்டு முறை உட்கொள்ளுங்கள்.

herbs

கசாயம்:

கசாயம் என்பது, மூக்கு பிரச்சனைகளை குணப்படுத்த் பருவமழைக் காலத்தில் சைனஸ் தொந்தரவை தீர்க்க உதவும் ஆயுர்வேத பானமாகும். இதன் பேக்டீரியா எதிர்ப்பு குணங்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.

தேவையான பொருட்கள்:

 • வறுத்த கொத்தமல்லி விதை

 • சீரகம்

 • பெருஞ்சீரக விதைகள்

 • கருப்பு மிளகுத்தூள்

செயல்முறை:

 1. வறுத்த கொத்தமல்லி, சீரகம் மற்றும் பெருஞ்சீரக விதைகளை கருப்பு மிளகுத்தூள் உடன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

 2. இந்த மருந்துப் பொருட்களையெல்லாம் நன்கு பொடியாக அரைத்து காற்று புகாத பாத்திரத்தில் அடைத்து வையுங்கள்.

 3. ஒரு கஷாயம் தயாரிக்க, ஒரு குவளை தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி கஷாய பொடியை சிறிது வெள்ளத்துடன் சேர்த்து கொள்ளுங்கள்.

 4. தயாரானதன் பிறகு பருகுங்கள்.

 5. இந்த இயற்கை மருந்துகளை இந்த மழைக்காலத்தில் பயன்படுத்தி ஆரோக்கியமாக இருங்கள். பருவமழைக் காலத்தை கொண்டாடுங்கள்.

  Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement