Keto Diet: இந்த 7 காய்கறிகளை சேர்த்துக்கோங்க., எவ்வளவு weight-ஆ இருந்தாலும் ஈஸியா கதம் ஓகயா..!

எடையை குறைக்க கீட்டோ டயட்டில் என்ன சாப்பிட வேண்டும் என தேடுகிறீர்கள் என்றால், இந்த 7 சுவையான காய்கறிகளை நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதோடு, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும்.

Translated by: Ragavan Paramasivam  |  Updated: November 07, 2019 11:52 IST

Reddit
Keto Diet: 7 Low-Carb Veggies That Can Help You With Quick Weight Loss; How To Include Them In Diet

இந்த குறைந்த கார்ப் காய்கறிகளை சாப்பிடுவதால் தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்

Highlights
  • Keto diet-ல் மிதமான புரதம் மற்றும் அதிக கொழுப்பு சாப்பிடுவதும் அடங்கும்
  • ப்ரோக்கோலி, lettuce மற்றும் பிற சாலட் கீரைகளையும் சாப்பிடலாம்.
  • இவை கார்ப்ஸ் குறைந்தவையாகவும், நார்ச்சத்து நிறைந்தவையாகவும் இருக்கும்

எடை இழப்பு : கீட்டோ டயட் ஒரு பிரபலமான எடை இழப்பு டயட் ஆகும். இது அதிக கொழுப்பு, மிதமான புரதம் மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதை உள்ளடக்கிய ஒரு டயட்டாகும். சரியான வழியில் பின்பற்றும்போது, ​​கீட்டோ டயட் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். குறுகிய கால எடை இழப்பு இலக்குகளை எதிர்பார்க்கிறவர்களுக்கு, கீட்டோ டயட் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இருப்பினும், நீங்கள் கார்ப்(carb) உட்கொள்ளல் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை குறைந்த கார்ப்ஸை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த கட்டுரையில், கெட்டோ உணவின் ஒரு பகுதியாக நீங்கள் உண்ணக்கூடிய குறைந்த கார்ப் காய்கறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்த காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் இவற்றில் கார்ப்ஸ் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன.

Weight loss diet: கீட்டோ டயட்டில் நீங்கள் சேர்க்கக்கூடிய குறைந்த கார்ப் காய்கறிகள்

1. Lettuce கீரை

Lettuce கீரை பொதுவாக சாலட் இலைகளாக உட்கொள்ளப்படுகிறது. சாண்ட்விச்கள், பர்கர்கள் மற்றும் சாலட்களில் முறுமுறுப்பான Iceberg lettuce பயன்படுத்தப்படுகிறது. இந்த கீரை உடலுக்கு நார்ச்சத்து அளிக்கிறது மற்றும் ஹைட்ரேட் செய்கிறது. சாலட் இலை வைட்டமின் சி நிறைந்த ஒரு மூலமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கீரை ஒரு குறைந்த கார்ப் காய்கறியாகும் மற்றும் கீட்டோ டயட்டில் இதை கவலை இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். 

fq8u9ou8

Lettuce கீரை கீட்டோ டயட்டில் சேர்த்துக்கொள்ள சிறந்த நீரேற்ற உணவாகும்.
Photo Credit: iStock

Also read: 5 Food Swaps That Can Make Keto Diet Easy To Follow

2. Zucchini சீமை சுரைக்காய்

Lettuce போலவே, சீமை சுரைக்காய் கீட்டோ டயட்டில் சேர்க்கக்கூடிய ஒரு ஹைட்ரேட்டிங், குறைந்த கார்ப் காய்கறியாகும். இது ருசிக்க சுவையாக இருக்கும். சாலடுகள், சாண்ட்விச்களில் சேர்க்கலாம் மற்றும் பச்சையாக கூட உட்கொள்ளலாம். Zucchini நூடுல்ஸ் இரவில் தாமதமாகவும் சாப்பிடக்கூடிய உணவாகும். மேலும், கீட்டோ டயட்டில் ஒரு சுவையான குறைந்த கார்ப் கொண்ட உணவாக இருக்கும். இந்தக் காய்கறி வைட்டமின் சி, ஏ மற்றும் கால்சியம் நிறைந்த மூலமாகும்.

3. காளான்கள் - Mushrooms

கீட்டோ டயட்டில் நீங்கள் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்று காளான்கள். அவற்றில் கார்ப்ஸ், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளன. அவற்றில் மிதமான அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம்(zinc) மற்றும் ஃபோலேட்(folate) நிறைந்துள்ளது. உங்கள் சாலட்களில் நீங்கள் காளான்களைச் சேர்க்கலாம், சுவையான க்ரீமி காளான் சூப் தயார் செய்யலாம், மேலும் தொக்காக வதக்கிச் சாப்பிடலாம். விரைவான எடை இழப்புக்கு கீட்டோ டயட்டில் நீங்கள் சேர்க்கக்கூடிய சரியான, குறைந்த கார்ப் காய்கறிகளில் ஒன்று காளான்கள்.

Also read: Missing Rotis On Keto Diet? Try These Protein-Rich Low-Carb Rotis For Quick Weight Loss

4. அஸ்பிரகஸ்- Aspragus

ஃபோலேட், வைட்டமின் k மற்றும் ஃபைபர் ஆகியவற்றின் சிறந்த மூலமாக அஸ்பிரகஸ் உள்ளது. ஒரு கப் அஸ்பிரகஸில் 30 கலோரிகளுக்கும் குறைவாக உள்ளது. அஸ்பிரகஸ் பொதுவாக grilled காய்கறிகள் அல்லது grilled இறைச்சியியுடன் உட்கொள்ளப்படுகிறது. நீங்கள் அஸ்பிரகஸை வதக்கிய காய்கறிகளுடன் அல்லது ஆம்லெட்டுகளில் சேர்க்கலாம்.

5. காலிஃபிளவர் - Cauliflower

காலிஃபிளவர், விரைவான எடை இழப்புக்கான கீட்டோ டயட்டின் ஒரு பகுதியாக வைத்துக்கோள்ள சிறந்த காய்கறியாகும். காலிஃபிளவரில் ஃபைபர் மற்றும் பி-வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களால் (free radicals) ஏற்படும் சேதத்தை குறைக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்றிகளையும் வழங்குகிறது. நீங்கள் காலிஃபிளவரை கிரில் செய்யலாம். மேலும் காலிஃபிளவர் ரைஸ், காலிஃபிளவர் சப்ஜி தயார் செய்யலாம். கோடுதலாக காலிஃபிளவரில் இருந்து பீஸ்ஸா தளத்தையும் தயார் செய்யலாம்.

f5i0qa1

காலிஃபிளவரில் வைட்டமின்-பி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
Photo Credit: iStock

6. பச்சை பீன்ஸ் - Green beans

ஒரு கப் பச்சை பீன்ஸில் 30 கலோரிகளுக்கு மேல் இல்லை. அவை கார்ப்ஸிலும் குறைவாக உள்ளன. உங்கள் உணவில் பச்சை பீன்ஸை சேர்ப்பதனால் நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை உடலுக்கு வழங்க முடியும்.

Also read: Why Eggs Are Ideal For Keto Diet: Decoding Health Benefits

7. ப்ரோக்கோலி - Broccoli

ப்ரோக்கோலியில் கார்ப்ஸ் மற்றும் கலோரிகளில் குறைவாக உள்ளது. மேலும், இது பிரபலமான கீட்டொ காய்கறி ஆகும். ப்ரோக்கோலியும் கிட்டத்தட்ட 89% நீர் உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு நீரேற்றும் (hydrating) உணவு என்பதை அறிந்துகொள்ளுங்கள். ப்ரோக்கோலியில் புரதத்தின் தடயங்களும் உள்ளன. இதை வதக்கலாம், அல்லது சூப்கள் முதல் சாலடுகள் வரை, உங்கள் உணவில் எப்படி வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement