உங்கள் எடை குறைய வேண்டுமா? இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க

கீட்டோஉணவு குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்க விரும்புவோருக்கு மிகச் சிறப்பாக செயல்படுகிறது

  |  Updated: September 21, 2020 12:03 IST

Reddit
Keto Diet For Weight Loss: Keto-Friendly Coconut Rice Recipe

கீட்டோ-டயட் தேங்காய் சாதம்

Highlights
  • You do not have to give up on tasty food in keto diet
  • We bring keto coconut rice recipe that includes grated cauliflower rice
  • You can grate it with a grater or use food processor to do the job

நம்மில் பெரும்பாலோருக்கு உடை எடை அதிகரிப்பது என்பது மிகவும் கவலையான விஷயம். பல கடுமையான உணவு முறைகள் மூலம் நாம் உடல் எடையை கட்டுப்படுத்த முயற்சிப்போம். ஆனால் தற்போது இந்த முறை மாறியுள்ளது. தற்போது  எடை குறைப்பு பயணம் மென்மையாகவும் எளிதாகவும் மாறிவிட்டது. எடை குறைப்பில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உணவு முறை கீட்டோஜெனிக் டயட் (கீட்டோ டயட் ) என்று அழைக்கிறோம். உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் பரிந்துரைபதால் இந்த உணவு முறை பிரபலமடைந்துள்ளது.

இந்த உணவு முறை குறைந்த கார்ப் மற்றும் அதிக கொழுப்பு உணவு பரிந்துரைகிறது. இது உடலில் உள்ள கீட்டோசிஸின் வளர்சிதை மாற்ற நிலையில் வைக்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பை எரிக்க இந்த முறை பயன்படுகிறது. கீட்டோஉணவு குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்க விரும்புவோருக்கு மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

Newsbeep

கெட்டோ டயட் புகழ் பெறுவதற்கான மற்றொரு காரணம், இந்த உணவு முறை நீங்கள் ருசியான உணவை விட்டுவிட வேண்டியதில்லை. உண்மையில், கீட்டோ டயட் உங்கள் உடலையும், மனதையும் திருப்திப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான மற்றும் சூப்பர் ருசியான உணவுகளை உங்களுக்கு வழங்குகிறது.

உங்கள் உணவுத் திட்டத்திற்கு ஒரு சுவாரஸ்யமான கீட்டோ டயட்  தேங்காய் சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இந்த செய்முறையில், கிளாசிக் தென்னிந்திய தேங்காய் சாதம் கொஞ்சம் மாற்றியமைக்கப்படுகிறது, இது டயட்டர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

கீட்டோ-டயட் தேங்காய் சாதம் செய்முறை :

தேவையான பொருட்கள்:

அரைத்த காலிஃபிளவர்- 4 கப்

அரைத்த தேங்காய்- 2 கப்

தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- 6-8

கடுகு மற்றும் சீரகம்- தலா 1 டீஸ்பூன்

உருட்டு மற்றும் சனா பருப்பு- தலா 1 தேக்கரண்டி

வேர்க்கடலை- 2 தேக்கரண்டி

முழு சிவப்பு மிளகாய்- 1

பச்சை மிளகாய்- 2, வெட்டப்பட்டது

உப்பு- சுவைக்கு ஏற்ப

Listen to the latest songs, only on JioSaavn.com

எலுமிச்சை சாறு- சுவைக்கு ஏற்ப

முறை:

Comments

  • ஈரப்பதம் முழுவதுமாக போகும் வரை அரைத்த காலிஃபிளவரை அடுப்பில் உலர வறுக்கவும். பின்னர் தனியாக வைக்கவும்.
  • உலர்ந்த வேர்க்கடலையை வறுத்து தனியாக வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும். பின்னர் சிவப்பு மிளகாய், கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
  • சனா மற்றும் உருட்டு பருப்பைச் சேர்த்து, அவை வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  • கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். அரைத்த தேங்காய் ,வேர்க்கடலை, வறுத்த காலிஃபிளவர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து எல்லாம் சேர்த்து வறுக்கவும்.
  • இறுதியாக, வடித்து வைத்த சோற்றில் மேற்கண்ட கலவையை கலந்தால் சூடான சுவையான சத்தான தேங்காய் சாதம் ரெடி.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement