உடல் எடை குறைக்க கீடோஜெனிக் ஆம்லெட்!!

நல்ல கொழுப்புகள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 24, 2019 15:51 IST

Reddit
Ketogenic Diet For Weight Loss: This Keto-Friendly Omelette Recipe Is A Perfect Breakfast Mealஉலகம் முழுவதும் தற்போது கீடோ டயட் பிரபலமாகி வருகிறது.  கீடோ டயட் என்பது மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகபடியான கொழுப்பு உணவுகளை உட்கொள்வதேயாகும்.  கார்போஹட்ரேட்தான் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக தரக்கூடியது.  ஆனால் உடல் எடையை அதிகரிக்கக் கூடியதும் அதுவே.  கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடல் தான் ஏற்கனவே சேமித்து வைத்த கொழுப்பையும் எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.  தற்போது உடல் எடையை குறைக்க எத்தனையோ விதமான டயட்டுகள் உருவாகிவிட்டன.  அவற்றை தங்கள் உடலுக்கு ஏற்றவாறும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறும் தேர்வு செய்து கொள்கின்றனர்.  அந்த வகையில் கீடோ டயட்டை சில பாலிவுட் பிரபலங்களான கரன் ஜோகர், ஹூமா குரேஷி ஆகியோர் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கீடோ டயட்டை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம். இரத்த சர்க்கரை:

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அடிக்கடி பசியுணர்வு இல்லாமல் நீங்கள் நீண்ட நேரத்திற்கு நிறைவாக இருக்கலாம்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.  உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்பு உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு ஆற்றல்:

கார்போஹைட்ரேட் அதிகம் சேர்த்து கொள்வதால் உடலில் இன்சுலின் அதிகபடியாக சுரக்கிறது.  இதனால் விரைவில் உடல் சோர்வடைந்துவிடும்.  கொழுப்பு மட்டுமே சேர்த்து கொள்வதால் உடலுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கிறது. 

n7tbhbe8 

மூளையின் ஆரோக்கியம்:

கொழுப்பு நிறைந்த உணவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் டொகோசாஹெக்சனாயிக் அமிலம் இருக்கும் என்பதால் மூளை மிகவும் சுருசுருப்பாக இயங்கும்.  கொழுப்பு உணவுகளை மிக குறைந்த அளவு உண்பதால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மூளை குறைபாடு ஆகியவை ஏற்படும். குடல் ஆரோக்கியம்:

நல்ல கொழுப்புகள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி ஆரோக்கியமாக இருக்க செய்கிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.comசிம்பிளான கீடோஜெனிக் ஆம்லெட்டை உடல் எடை குறைக்க நீங்கள் சாப்பிடலாம்.  சீஸ், வெங்காயம் மற்றும் முட்டை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஆம்லெட்டில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement