அறிவாற்றல் இழப்பை தடுக்கும் கீடோ டயட்

கீடோ டயட்டை பின்பற்றுபவர்களுக்கு அறிவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது

एनडीटीवी फूड डेस्क (with inputs from IANS)  |  Updated: October 16, 2018 09:33 IST

Reddit
Ketogenic Diet May Prevent Cognitive Decline; Here's What Your Keto Diet Should Include

உணவில் அதிகளவு கொழுப்பு மற்றும் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டை சேர்த்து கொள்வதற்கு பெயர் தான் கீடோஜெனிக் டயட். கீடோ டயட்டை பின்பற்றுபவர்களுக்கு அறிவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது. நம் வயிற்றுக்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவை இரண்டில் ஒரு உறுப்பின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிப்படையும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நம் வயிற்று பகுதியில் இருக்க கூடிய பாக்டீரியா நரம்பியல் இயக்கங்களை சீராக வைத்துக் கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்பட்டது. கீடோ டயட்டை பின்பற்றுவதால், மூளை இயக்கங்கள் மேம்பட்டு நரம்பியல் சிதைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ச்சியாக கீடோ டயட் கொடுக்கப்பட்டு வந்த எலிக்கு 16 வாரங்கள் கழித்து, மூளையில் உள்ள செரிப்ரல் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்திருப்பது தெரிய வந்தது. மேலும் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய மைக்ரோபையோம் அதிகரித்து, உடலில் இரத்த சர்க்கரை சீரானது. உடல் எடை குறைந்திருப்பதையும் காண முடிந்தது. மூளையில் நினைவாற்றலை இழக்க செய்யும் அமைலாய்டு- பீடாவை அழிக்கக்கூடிய செயல்முறைகளும் சீராக நிகழ்வதை காண முடிந்தது.

கீடோ டயட் எப்படி இருக்க வேண்டும்

உணவில் குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் அதிகபடியான கொழுப்பு இருப்பதே கீடோ டயட். உடலில் கார்போஹைட்ரேட் குறையும் போது நம் உடல் கீடோஸிஸ் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. அதாவது, கொழுப்பை எரித்து உடலுக்கு ஆற்றல் கொடுப்பது தான் இந்த செயல்முறை. கல்லீரலில் கொழுப்பை கீடோனாக மாற்றி மூளைக்கு ஆற்றலை கொடுக்கும். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நீங்கள் முக்கியமாக கீடோ டயட்டை கடைபிடிக்க வேண்டும்,

Listen to the latest songs, only on JioSaavn.com

கீடோ டயட்டில் நீங்கள் சேர்க்க மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆடு, கோழி மற்றும் பன்றியின் இறைச்சி, மீன், முட்டை, வெண்ணெய், சீஸ், கொட்டைகள், விதைகள் போன்ற உணவு பொருட்களை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய், அவகாடோ, வெங்காயம், தக்காளி, மிளகு போன்றவற்றையும் சேர்த்து கொள்வது நல்லது. அதேபோல சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகள், பழங்கள், பீன்ஸ், கிழங்குகள், மையோனிஸ், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement