ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட ஆசையா?? இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!!

கோதுமை, கம்பு, ராகி போன்றவற்றை கொண்டு செய்யப்படும் ரெசிபிகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை அளவை குறைத்து, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 15, 2019 13:06 IST

Reddit
Weight Loss: Kick-Start Your Mornings With These Healthy Kuttu Recipes For Breakfast 
Highlights
  • காலை உணவை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
  • பக்வீட் என்னும் கோதுமையினம் வீகன் உணவுகளுள் ஒன்று.
  • தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபிகளை காலையில் சாப்பிடலாம்.

காலை உணவை ஆரோக்கியம் நிறைந்ததாக சாப்பிட்டு நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க யாருக்குதான் ஆசை இருக்காது!! பருப்புகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை கொண்டு காலை உணவை சிறப்பானதாக செய்ய முடியும்.  குறிப்பாக கோதுமை, கம்பு, ராகி போன்றவற்றை கொண்டு செய்யப்படும் ரெசிபிகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை அளவை குறைத்து, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.  கோதுமையினமான பக்வீட் கொண்டு செய்யப்படும் சில எளிய ரெசிபிகளை பார்ப்போம்.  

தோசை: 
பக்வீட் மாவு கொண்டு தோசை தயாரித்து சாப்பிடலாம்.  முறுகலாக செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்.  இத்துடன் தேங்காய் சட்னி மற்றும் காய்கறி சாம்பார் சேர்த்து சாப்பிடலாம். 

 

ef08cl9g

 


பேன்கேக்: 
காலை உணவிற்கு பேன்கேக் எப்போதுமே சிறந்தது.  அதனை இந்த பக்வீட் கொண்டு தயாரிக்கலாம்.  அதன் மேல் சிறிதளவு தேன் அல்லது பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். pancakes guardian 625

 


பராத்தா: 
பக்வீட் மாவு, சிங்காரே மாவு சேர்த்து முறுகலான மற்றும் சுவையான பராத்தா செய்து சாப்பிடலாம்.  நவராத்திரி போன்ற திருநாட்களில் இதனை செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  ihqluc7g

 

சாண்ட் விச்: 

சாண்ட் விச்சில் இருக்கக்கூடிய நல்ல விஷயம் என்னவென்றால் சாஸ், டிப், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றையும் உங்களுக்கு பிடித்தமானதாக மாற்றி வைக்கலாம்.  சாண்ட் விச் பொதுவாக ஒயிட் பிரட் மற்றும் மல்டிகிரைன் பிரட் கொண்டு தயாரிப்படுகிறது.  பக்வீட் மாவு கொண்டும் சாண்ட் விச் தயாரித்து சாப்பிடலாம்.  g08a5r9o

 குட்டு சில்லா: 
கலோரிகள் குறைந்த குட்டு சில்லா ரெசிபியை மிக எளிதில் தயாரிக்கலாம்.  எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?

Listen to the latest songs, only on JioSaavn.com

தேவையான பொருட்கள்: 
பக்வீட் மாவு - 1 கப் 
உப்பு - தேவையான அளவு 
பனீர் - 1/2 கப் 
இஞ்சி - 2 துண்டு 
தக்காளி - 2 
வெங்காயம் - 2 
கொத்தமல்லி - சிறிதளவு 
பச்சை மிளகாய் - 2-3 
 

1afu8vt8

செய்முறை:
ஒரு பௌலில் பக்வீட் மாவு, துருவிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பனீர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் பேன் வைத்து சூடானது அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
பின் கலந்து வைத்துள்ள மாவை தோசை போல் தயாரித்து எடுக்கலாம்.
இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறலாம்.
இத்துடன் காரசாரமான கொத்தமல்லி அல்லது புதினா சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement