கோடை வெப்பத்தில் புதினா வாடிப்போகாமல் இருக்க என்ன செய்யலாம்??

செரிமானம், தலைவலி, பற்களின் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு புதினா பெரிதும் பயன்படுகிறது.  உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை கொடுக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 29, 2019 17:34 IST

Reddit
Summer Kitchen Hacks: How To Keep Mint Leaves Fresh For Longer
Highlights
  • புதினா இலையில் வைட்டமின் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.
  • புதினா தண்டுகளை தண்ணீரில் போட்டு வைத்தால் அதன் இலைகள் வாடி போகாது.
  • புதினா இலைகளை பேப்பர் டவலில் சுற்றி வைக்கலாம்.

புதினா மற்றும் கொத்தமல்லி ஆகிய இரண்டிற்கும் எந்த சீசனும் கிடையாது. உணவுகளுக்கு நறுமணம் மற்றும் ருசியை சேர்க்கும் இந்த புதினாவை கொண்டு நிறைய ரெசிபிகளை செய்யலாம். புதினா பராத்தா, புதினா சட்னி தவிர ஆம் பானா, ஜல்ஜீரா, நிம்பூ பானி ஆகியவற்றில் சுவை சேர்க்க புதினா பயன்படுத்தப்படுகிறது.  இதன் வாசனைக்காக மட்டுமில்லாமல், மருத்துவ குணத்திற்காகவும் பயன்படுகிறது.  செரிமானம், தலைவலி, பற்களின் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு புதினா பெரிதும் பயன்படுகிறது.  உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை கொடுக்கிறது. 

5c6hl1c8

புதினாவின் ஆரோக்கிய நன்மைகள்:

புதினாவில் வைட்டமின் ஏ, சி இருக்கிறது.  இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் துளியளவும் இல்லை.  வீட்டிலேயே மிகவும் எளிமையாக வளரக்கூடிய தாவரம் தான் புதினா.  ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால் உடல் வீக்கத்தை குறைக்கும்.  சருமத்திற்கு நன்மை பயக்கும் புதினா முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் பார்த்துக் கொள்ளும்.  கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க புதினா இலைகளை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரை அருந்தலாம்.  புதினாவை உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும்.  இல்லையென்றால் விரைவில் வாடிவிடும்.  புதினாவை நீண்ட நாட்கள் ஃப்ரஷாக வைத்திருக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

1. தண்ணீரில் போட்டு வைக்கலாம்:

புதினா இலைகளை அதனி குச்சியோடு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி கொள்ளவும்.  பின் ஒரு கத்திரிக்கோல் கொண்டு அதன் முனைகளை வெட்டிவிடவும்.  பின் ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி, அதில் இந்த புதினா தளைகளை வைத்தால் வாடிபோகாமல் இருக்கும்.  வெளியே தெரியும் இலைகளை ஒரு ப்ளாஸ்டிக் பை கொண்டு லேசாக மூடிவைத்தால் ஃப்ரஷாக இருக்கும்.

1pbcuoog

2. பேப்பர் டவலை தண்ணீரில் போட்டு முழுவதுமாக ஊறிய பின் அதில் புதினா இலைகளை வைத்து சுற்றி வைக்கவும்.  இதனை அப்படியே காற்று புகாத ஒரு ஏர்டைட் கண்டெய்னர் அல்லது ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com