தமிழ்நாடு சாலையோர உணவுகளின் கிங் 'கொத்து பரோட்டா'

மாலை நேரத்தில் தொடங்கப்படும் சாலையோர கடைகளில் உள்ள உணவுகளுக்கு எப்போதுமே கூட்டம் உண்டு

Ashwin Rajagopalan  |  Updated: June 12, 2018 16:43 IST

Reddit
Kothu Parotta is The Most Delicious Street Food Item to Try in Tamil Nadu
Highlights
  • குத்து பரோட்டா என்பது துண்டுகளாக்கப்பட்ட பரோட்டா
  • மைதா மாவுடன், மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் உணவு
  • தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் ருசியான கொத்து பரோட்டகள் கிடைக்கும்
Photo Credit: Ashwin Rajagopalan

மதுரை தெருக்களில், மாலை வேளையில் ‘டங் டங்’ என்ற சத்தம் ஒலிப்பதை கவனித்திருப்பீர்கள், பரோட்டா மாஸ்டர்களின் அந்த வேகம், கொத்து பரோட்டா தயாராகி கொண்டிருப்பதை உணர்த்தும். துண்டுகளாக்கப்பட்ட பரோட்டா உடன் மசாலா சேர்த்து தயாரிப்பது கொத்து பரோட்டா. 

தமிழ்நாடு மதுரையில் உள்ள உணவகங்களில் சுவையான உணவுகள் கிடைக்கும். மாலை நேரத்தில் தொடங்கப்படும் சாலையோர கடைகளில் உள்ள உணவுகளுக்கு எப்போதுமே கூட்டம் உண்டு.  கொத்து பரோட்டா மதுரையில்தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். பரோட்டாவுடன், பிரெட், முட்டை, கறித்துண்டுகள் சேர்த்து சூடாக பரிமாறப்படும் உணவு கொத்து பரோட்டா, இது சாலையோர உணவுகளில் மக்களின் விருப்பமான உணவாக உள்ளது.
 
porutta 620x350

Photo Credit: Ashwin Rajagopalan

மைதா மாவு உருட்டி, பிசைந்து, தேய்த்து, ரொட்டி போல சுட்டு எடுத்து, முட்டை, அல்லது கறித்துண்டுகளை சேர்த்து, பிரெட், மசாலாப்பொருட்கள் சேர்த்து கொத்தி எடுத்தால் கொத்து பரோட்டா தயார். கறி இல்லாத கொத்து பரோட்டாவும் செய்யலாம் முட்டை, கறிக்கு பதிலாக, வெங்காயம் குடைமிளகாய், காய்கறிகள், மசாலா பொருட்கள் சேர்த்து செய்யலாம். சென்னையில் உள்ள சைவ உணவகங்களான சரவண பவன் உள்ளிட்ட உணவகங்களில், சைவ கொத்து பரோட்டாக்கள் பரிமாறப்படுகின்றன. 
 

A post shared by @kaapiccino onஅதுமட்டும் இல்லாமல், சைனா சுவையில் கூட கொத்து பரோட்டாக்கள் செய்யப்படுகின்றன. காய்கறி குழம்பிற்கு பதிலாக, தயிர் பச்சடியும்  கொத்து பரோட்டாவுடன் சில இடங்களில் கொடுக்கப்படுகின்றன. சில உணவகங்களில் சில்லி பரோட்டா என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.

ஒரு பக்கம் மதுரை கொத்து பரோட்டாக்கள் புகழ்பெற்றது என்றாலும், தூத்துக்குடி கொத்து பரோட்டாக்கள் தனி சுவை. தூத்துக்குடி நகரிலுள்ள ‘ஃபேமஸ் நைட்க்ளப்’ உணவகத்தில், கொத்து பரோட்டாக்கள் மிக சுவையானவை. மாலை தொடங்கி நள்ளிரவு வரை உணவகம் செயல்படுவதாக உணவகத்தின் உரிமையாளர் சாமுவேல், கூறினார்.  இந்தியாவின் முக்கியமான துறைமுகங்களில் தூத்துகுடி துறைமுகம் ஒன்று. இரவு நேரங்களில் வரும் மாலுமிகளுக்கு கிடைக்கும் சுவையான உணவாக கொத்து பரோட்டா உள்ளது.
 

உரிமையாளர் சாமுவேலின் மகன் ஜான், எனக்கு கொத்து பரோட்டா செய்ய தயாரனார். கொத்து பரோட்டா காரசாரமாக இருக்கும் என கூறினார். ஒரு தட்டில், பரோட்டா துண்டுகள், மசால பொருட்கள் சேர்த்தார். அது மட்டுமில்லாமல், வழக்கமாக இருக்கும் பரோட்டாக்களை போல இல்லாமல், மொறுகளான பரோட்டாக்களை சேர்த்து செய்யப்படுவது தூத்துக்குடி ஸ்டைல் என கூறினார். எண்ணெய் பரோட்டா, மதுரைக்கு அருகிலுள்ள விருதுநகர் மாவட்டத்தின் ஸ்பெஷல்.

தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கையில், கொத்து பரோட்டாவை கொத்து - ரொட்டி என அழைப்பர். மேலும், கொத்து ரொட்டி இலங்கையில்தான் உருவானது என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர் இப்படி கொத்து பரோட்டா உருவான இடங்களுக்குப் போட்டி இருந்தாலும், அனைவரும் விரும்பும் சுவையான சாலையோர உணவு என்பதில் சந்தேகமில்லை.
 

Disclaimer:

The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments 

About Ashwin RajagopalanI've discovered cultures, destinations and felt at home in some of the world's most remote corners because of the various meals I've tried that have been prepared with passion. Sometimes they are traditional recipes and at most times they've been audacious reinterpretations by creative chefs. I might not cook often but when I do, I imagine I'm in a cookery show set - matching measuring bowls, et all!

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com