பக்ரீத் ஸ்பெஷல் : இந்த 4 எளிய வழிமுறைகளை வைத்து, நீங்களும் சுலபமாக பிரியாணி செய்யலாம்!

एनडीटीवी फूड  |  Updated: August 21, 2018 22:06 IST

Reddit
Learn The Art Of Making Biryani With These 4 Easy Steps

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலுமே அதிக மக்களால் விரும்பப்படும் உணவு வகைகளில் மிக முக்கியமானது பிரியாணி. வட இந்தியாவில் முதலில் பிரயானியை கொண்டு வந்தது முகலாயர்கள் என்றும், தென் இந்தியாவில் பிரியாணியை அறிமுகப்படுத்தியது அரேபியர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஹைதராபாத் பிரியாணி, கீமா பிரியாணி, அவாதி மட்டன் பிரியாணி, லக்னவ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் பிரியானி என தனித்தன்மையான சுவை மற்றும் உட்பொருட்களை கொண்ட பல்வேறு வகையான வித்தியாசமான பிரியாணிகள் இந்தியா முழுக்க பிறந்தது.

சோம்பல் முறித்து எழும் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவாக இருக்கட்டும், அல்லது மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடக்கூடிய விருந்தாக இருக்கட்டும், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு முழுமையான உணவாக இருக்கிறது பிரியாணி. பிரியாணி சமைப்பது என்பது மிகப்பெரிய கலை என்றே சொல்லவேண்டும். ஒரு முழுமையான, நாக்கில் எச்சில் ஊறச்செய்யும் பிரியாணி சமைப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

biryani
 

புது தில்லியில் உள்ள 'தாஜ் மஹால் ஹோட்டல்' தலைமை சமையற்காரர் ராஜேஷ் சிங்குடன் பிரியாணி தயாரிப்பது குறித்த ஒரு சிறப்பு மாஸ்டர் வகுப்பை ஏற்பாடு செய்திருந்தது. சமையல் நிபுணர்களுடன் சேர்ந்து சமைத்தும், அவர்களிடம் கேள்விகள் கேட்டு கற்றுக்கொண்டும், சுவையான பிரியாணியை வீட்டிலேயே சமைப்பது எப்படி என்பது குறித்த உத்திகளை தெரிந்துகொள்ள இந்த சிறப்பு வகுப்பு வாய்ப்பளித்தது.

இந்த சிறப்பு வகுப்பின்பொழுது, தலைமை சமையற்காரர் ராஜேஷ் சிங் சில சமையல் குறிப்புகளையும், இந்தியாவில் அவர் ருசித்த வெவ்வேறு வகையான பிரியாணிகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

calicut biryani

வீட்டில் பிரியாணி சமைக்கும்பொழுது, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

1. இரண்டு வகையான பிரிக்கான வகைகள் உள்ளன. ஒன்று - லக்னவ் ஸ்டைல்; இரண்டு - ஹைதராபாதி ஸ்டைல்

2. முதலாம் வகையான லக்னவ் ஸ்டைலில், மட்டன் கறியுடன் சேர்த்து பிரியாணியும் தயார் செய்யப்படும்; இரண்டாம் வகையான ஹைதராபாத் ஸ்டைலில், கறியை நடுவில் வைத்து அதன் அழுத்தத்தில் (தம் பிரியாணி) சமைக்கப்படும்.

3. ஹைதராபாத் ஸ்டைலில் சமைக்கும்பொழுது, முதலில் கறியை மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றதுடன் கலந்து ஒரு நாள் வைத்திருக்கப்படும். பின்னர், இந்த கறியுடன் புதினா மற்றும் அன்னாசி பழச்சாற்றை பூசி ஒரு மணிநேரம் காய வையுங்கள்.

4. அன்னாசி பழச்சாறு பிடிக்காதவர்கள், பப்பாயா பழத்தை மாற்றாக வைத்துக் கொள்ளலாம்.

Comments

handi biryani recipe

ஆகவே, இப்பொழுது நீங்கள் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் வீட்டிலேயே சுவையான பிரியாணியை சமைக்கலாம்!


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement