உதடு வெடிப்புக்கு இயற்கையான பொருட்களால் சிறந்த வீட்டு வைத்தியம்

பலருக்கும் உதடுகள் வெடித்தும் உதட்டின் தோல்கள் பெயர்ந்து வருவதைப் பார்க்கலாம். இது மிகவும் வலியையும் ஏற்படுத்தும். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் உண்டு. இரவு தூங்குவதற்கு  முன் நெய்யை உதட்டில் தடவ வேண்டும். 3-4 நாட்கள் செய்து வந்தால் பலனைப் பெறலாம்.

Suparna Trikha  |  Updated: March 12, 2019 15:17 IST

Reddit
Lip Care: Use These Natural Ingredients To Get Soft And Supple Lips

உடல், முகம் என்று சருமப் பராமரிப்பில் இரண்டை மட்டும் செய்து வருவதை பார்க்கலாம். கைகள், பாதாம். முகம் மற்றும் உதடு என தனித்தனியே கவனம் செலுத்தும் போது கூடுதலாக அழகை பாதுகாக்க முடியும். மென்மையான உதடுகளை பெற வேண்டுமென்றால் போதுமானவரை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். உங்கள் உதடு கறுப்பாக, வறண்டும் வெடித்தும் காணப்படுகிறதென்றால் நிச்சயமாக உதட்டின் அழகை பாரமரிப்பது அவசியம் ஆகிறது.  

பாதாம் எண்ணெய் மூலமாக 2-3 மூன்று மசாஜ் செய்து வந்தால் உடனடியான மாற்றங்களை காணலாம்.. உதட்டிற்கான ஸ்க்ரப்பை வீட்டிலே செய்யவது எப்படி என்று பார்க்கலாமா...

தேவையான பொருட்கள்

50 கிராம் தேன்

20 கிராம் அல்லது 4 டீஸ்பூன் சர்க்கரை

5 மி லி ரோஸ் வாட்டர்

5 மி.லி வெண்ணிலா எஸன்ஸ்

செய்முறை 

மேலே சொன்ன பொருட்களை ஒன்றாக கலந்து அதில் டீ ஸ்பூனில் பாதியை எடுத்து உதட்டில் ஸ்க்ரப்பாக தேய்க்கவும். தேனில் உள்ள மாய்ஸ்ரேசர் மற்றும் சர்க்கரை உதட்டை மிருதுவாக்குகிறது. ரோஸ் வாட்டர் உதட்டை மென்மையாக பாதுகாக்கிறது. அனைத்தும் கலந்த இது உதட்டின் அழகை மேம்படுத்த உதவுகிறது. 

வெடித்த உதடுகளுக்கு 

பலருக்கும் உதடுகள் வெடித்தும் உதட்டின் தோல்கள் பெயர்ந்து வருவதைப் பார்க்கலாம். இது மிகவும் வலியையும் ஏற்படுத்தும். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் உண்டு. இரவு தூங்குவதற்கு  முன் நெய்யை உதட்டில் தடவ வேண்டும். 3-4 நாட்கள் செய்து வந்தால் பலனைப் பெறலாம். காபி, டீ போன்றவற்றை சூடாக  குடிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. 

கறுப்பான உதடுகளுக்கு

கறுப்பான உதடுகள் பலரும் விரும்புவதில்லை. இதனால், அடர்த்தியான வண்ணம் கொண்ட லிப் ஸ்டிக்கை போட்டுக் கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். உதட்டின் சருமத்தை சுவாசிக்க விடுங்கள். எப்போதும் லிப்ஸ்டிக்குடன் இருப்பதை தவிர்த்து விடுங்கள். சுத்தமான சருமம் தான் ஆரோக்கியமான சருமம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

கறுப்பான உதடுகளை மாற்ற

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை

 இரண்டு எண்ணெய்யையும் நன்றாக கலந்து ஒரு நாளில் அடிக்கடி இதைத் தடவி வர வேண்டும்.

லிப் மாஸ்க் போட்டு வந்தாலும் டார்க்கான உதடுகள் லைட்டனாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

2 டே.ஸ்பூன் பாதாம் பேஸ்ட்

1 டே.ஸ்பூன் உருளைக் கிழங்கு துருவியது

1/2 டீ. ஸ்பூன் - எலுமிச்சை சாரு

1 டீ.ஸ்பூன் - ஃப்ரஸ் க்ரீம்

செய்முறை

அனைத்துப் பொருட்களையும் நன்றாக கலந்து உதட்டில் அப்ளே செய்யவும். 

10 நிமிடங்களுக்குபின் வெதுவெதுபான தண்ணீரால் துடைத்து  எடுக்கவும்.

இதை வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தவும். இந்த மாஸ்க் கொடுக்கும் மாற்றத்தை சீக்கிரமே பார்க்கலாம். 

உதட்டைச் சுற்றிலும் உள்ள கறுப்பை நீக்க

உதட்டைச் சுற்றி கறுப்பாக இருப்பதைப் எண்ணி பலரும் கவலைப் படலாம். அதை எப்படி நீக்க வேண்டுமெனத் யாருக்கும் தெரியவில்லை. இதற்கு எளிதான வழி உண்டு. உதட்டை நாக்கினால் துலாவில் எச்சில் படுத்துவதை நிறுத்த வேண்டும். சின்ன கிண்ணத்தில் முழு கொழுப்புச் சத்து உள்ள பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் குளிர்ச்சியாக இருத்தல் அவசியம். பச்சினை பாலில் நனைத்து உதட்டில் வைக்கவும் குளிர்ச்சி குறைந்த பின் மறுபடியும் இதே போல் செய்ய வேண்டும் இவ்வாறு 10 நிமிடம் இப்படி செய்ய வேண்டும். 3-4 நாட்களுக்குப் பின் செய்து வந்தால் உதட்டில் வித்தியாசத்தை உடனடியாக உணர்வீர்கள். 

வெடித்த உதடுகளுக்கு 

உதட்டைச்  சுற்றியோ அல்லது உதட்டின் இருபக்க மூலைகளிலும் உதடு வெடித்து விட்டால் வலியும் பார்க்கவே அசிங்கமாக இருக்கும். இதற்கு ஈரப்பதம் தான் முக்கியம். அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்க வேண்டும். ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் குளிர்ந்த நீரை உதடுகளில் வைக்கலாம். குளிர்ந்த திரவங்களைவைத்து மெல்ல மெல்ல மசாஜ் செய்யுங்கள் 2-3 முறை செய்து வந்தாலே மாற்றங்களை பார்க்கலாம். 

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com