கேஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் வீட்டில் செய்வது எப்படி? எளிதான ரெசிபி!

இப்போது கேஃப்சி சிக்கனை வீட்டிலே செய்யலாம் என்றால் நம்புவீர்களா? எளிதான ரெசிபி இங்கே.

  |  Updated: May 16, 2020 16:28 IST

Reddit
Lockdown Cooking: How To Make KFC-Style Fried Chicken At Home

உங்களுக்குப் பிடித்த அந்த கேஃப்சி ஃப்ரைடு சிக்கனை வீட்டில் செய்யலாம்.

சிக்கன் விரும்பிகள் இருந்தால், அவர்களுக்கு மிருதுவான, வறுத்த சிக்கன் என்றால் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான சிக்கன் விங்க்ஸை நினைத்துப் பாருங்கள், மசாலா தடவிய, முழுமையாக வறுத்த சிக்கன், கேட்கும் போது எச்சில் ஊறும் இல்லையா? ஃப்ரைடு சிக்கன் குறித்துப் பேசும் போது, நம் அனைவருக்கும் நினைவில் வருவது கேஃப்சி சிக்கன் விங்க்ஸ் தான். உங்களுக்குப் பிடித்த அந்த கேஃப்சி ஃப்ரைடு சிக்கனை, சாஸில் தொட்டு சாப்பிட்டால் சொர்க்கத்தை உணரலாம். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால், நாம் அனைவரும் விருப்பமான உணவுகளை வெளியே சாப்பிட முடியாமல் உள்ளோம். இப்போது கேஃப்சி சிக்கனை வீட்டிலே செய்யலாம் என்றால் நம்புவீர்களா? எளிதான ரெசிபி இங்கே.

Newsbeep
usn4dnv

தேவையான பொருட்கள்:

ஊறவைக்க:  

சிக்கன் விங்ஸ் (சுத்தம் செய்தது)
மஞ்சள் தூள்
தயிர்
சிவப்பு மிளகாய்த் தூள்
இஞ்சி-பூண்டு விழுது
மிளகுத் தூள்
சிக்கன் மசாலா
எலுமிச்சை

கோட் செய்ய:

மசாலா சிப்ஸ்
எண்ணெய்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் விங்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அனைத்து பொருட்களையும் அல்லது மரினேஷனையும் சேர்க்கவும்.

2. எல்லாவற்றையும் நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஃபிரிஜில் வைக்கவும்.

3. இதற்கிடையில், மசாலா சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து, வெறும் கடாயில் வறுக்கவும். சிப்ஸை பொடியாக நசுக்கவும்.

4. இப்போது ஃபிரிஜில் இருக்கும் சிக்கனை எடுத்து, ஒவ்வொரு பீஸிலும் இந்த மசாலா சிப்ஸை கோட் செய்யவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

5. ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் இந்த சிக்கனை மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

6. பிறகு இந்த சிக்கன் பீஸ் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து சூடாகப் பரிமாறவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement