தூக்கத்தை மேம்படுத்தும் 7 உணவுகள்!!

செர்ரி, பாதாம், கெமோமைல் டீ, வெதுவெதுப்பான பால், வாழைப்பழம், ஓட்ஸ், டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நல்ல தூக்கத்தை பெற முடியும். 

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: August 26, 2019 16:20 IST

Reddit
Losing Sleep Caring For Dementia Patients May Affect Health: Eat These 7 Foods To Induce Sleep

டிமென்ஷியா என்று சொல்லப்படும் நினைவாற்றல் மங்கும் நோய் பாதிப்பு உள்ளவர்களை கவனித்து கொள்பவர்களுக்கு தூக்க தடைபட்டிருக்கும்.  இதனால் அவர்களிம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.  நாள் ஒன்றிற்கு மிகவும் குறைவான நேரமே தூங்குவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவர்களும் மிக எளிதில் நோய்வாய் பட வாய்ப்புள்ளது.  ஆழ்ந்த உறக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடித்தளம்.   சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின் தகவல்படி, தூக்கமின்மை, டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களின் பாதிப்புள்ளவர்களை கவனித்து கொள்பவர்களுள் 3268 பேரின் உடல் அசைவு, தூக்கம், மற்றும் மூளையின் செயல்பாடு போன்றவை சோதிக்கப்பட்டது.  

Listen to the latest songs, only on JioSaavn.com

அதேபோல, சராசரியானவர்களின் பகல்நேர உடற்பயிற்சி, மதிய நேரங்களில் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கமின்மை, இரவில் மது அருந்தும் பழக்கமின்மை மற்றும் காலை நேரத்தில் அதிகபடியான சூரிய உடலுக்கு கிடைப்பது போன்ற விஷயங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.   பின் இதுபோன்ற பழக்கங்கள் தூக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  

தொடர்ச்சியாக தூக்கம் தடைபடுவதும், ஒழுங்கற்ற மற்றும் ஆழ்ந்த உறக்கமின்மை போன்றவை மூளை செயல்பாடுகளை பாதிப்பதுடன் உணர்ச்சி நிலையில் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தும்.  மேலும் மன அழுத்தம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சிக்கல் போன்றவற்றை உண்டாக்கும்.   அதனால் கட்டாயமாக 7-8 மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியமானது.  தூக்கத்தை அதிகரிக்கக்கூடிய சில உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.  செர்ரி, பாதாம், கெமோமைல் டீ, வெதுவெதுப்பான பால், வாழைப்பழம், ஓட்ஸ், டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நல்ல தூக்கத்தை பெற முடியும். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement