குறைவான கலோரி உள்ள சுவையான 5 சாண்ட்விச்

கடைகளில் வாங்கியதை பிரட்டில் தடவி சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலே ஆரோக்கியமானதை செய்து சாப்பிட முடியும். ஆரோக்கியமான சாண்ட்விச்சில் பயன்படுத்தக்கூடிய சிலவற்றை பார்க்கலாம். 

   |  Updated: March 01, 2019 14:52 IST

Reddit
Low-Calorie Diet: 5 Healthy Sandwich Spreads To Make Your Snack Diet-Friendly
Highlights
  • சாண்ட்விச்சில் தடவப்படும் பொருட்களில் ட்ரான்ஸ் ஃபேட் அதிகமாகவுள்ளது
  • குறைந்த கலோரிகள் கொண்ட டயட்டுக்கேற்ற சாண்ட்விச்களை வீட்டிலே தயாரிக்கலாம்.
  • ஹமஸ்ஸுடன் வெள்ளரிக்காய், தக்காளி ஆகிய காய்கறிகள் வைத்து சாப்பிடலாம்.

சாண்ட்விச் மிகப் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று. எளிதாக சில நிமிடங்களிலே செய்ய முடிகிற உணவு வகை என்பதால் பலரும் இதையே  செய்யது சாப்பிடுகின்றனர். ஆரோக்கியமான டயட் பட்டியலில் நிச்சயமாக பிரட்டுக்கு இடமில்லை. பிராசஸ் செய்யப்பட்ட மாவில் செய்யப்படும் பிரட் கூடுதலாக கலோரிகளையே அதிகப்படுத்துகிறது. கடைகளில் சாண்ட்விச் வாங்கும் போது அதிகளவு உப்பு, சர்க்கரை மற்றும் ட்ரான்ஸ் ஃபேட் ஆகியவை உள்ளது. சாண்ட்விச்சில் தடவப்படும் பொருட்களில் தான் இவை அதிகம் உள்ளது. குறைந்த கலோரிகள் கொண்ட டயட்டுக்கேற்ற சாண்ட்விச்களை வீட்டிலே தயாரிக்கலாம். 

கடைகளில் வாங்கியதை பிரட்டில் தடவி சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலே ஆரோக்கியமானதை செய்து சாப்பிட முடியும். ஆரோக்கியமான சாண்ட்விச்சில் பயன்படுத்தக்கூடிய சிலவற்றை பார்க்கலாம். 

1. ஹமஸ் 

கொண்டைக் கடலை, எள் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து தயாரிக்கப்படுகிறது. ஹமஸ்ஸில் புரதச் சத்து மற்றும் நல்ல கொழுப்பு சத்து ஆகியவை உள்ளது.  ஹமஸ்ஸுடன் வெள்ளரிக்காய், தக்காளி ஆகிய காய்கறிகள் வைத்து சாப்பிடலாம். 

2. மசித்த அவகேடோ 

வித்தியாசமான ஃப்ரூட் வகைகளில் ஒன்று எத்தனை விதமான ஸ்பைஸஸ் போட்டாலும் அதை அழகாக எடுத்து சுவையூட்டக்கூடியது. இதை இனிப்பு மற்றும் காரம் இரண்டுவகையான சாண்ட்விச்சிலும் பயன்படுத்தலாம். 

3. ரிக்கோட்டா சீஸ் 

ஆரோக்கியமான சீஸ் வகைகளில் ரிக்கோட்டாவும் ஒன்று. இதனுடன் கீரை வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். 

budhs1m8
 
 

4. ஜாம் 

கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையான ஜாம்மை தயாரிக்கலாம். உங்களுக்கு பிடித்த பெர்ரி பழங்களை மசித்து சுகர் அல்லது தேன் கலந்து மைக்ரோஓவனில் 5 நிமிடம் லோ ஹீட்டில் வைத்தால் ஜாம் தயார். ஆரோக்கியமான ஜாமை எளிதில் தயாரிக்க முடியும் 

Listen to the latest songs, only on JioSaavn.com

5. பிநட் பட்டர் 

சாண்ட்விச் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது பீநட் பட்டர்தான். நிலக்கடலை மற்றும் பாதாம் பருப்பை வீட்டிலே அரைத்து எளிதாக இதை தயாரிக்கலாம். இதனுடன் வாழைப்பழம், மற்றும் தேன் சேர்த்து சாண்ட்விச் செய்து சாப்பிடலாம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement