டயட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..? - அதிர்ச்சித் தகவல்!

லோ கலோரி டயட் மூலம் உடல் எடையை குறைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு விளைவுகள் ஏற்படுகிறது என ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

NDTV Food (with inputs from ANI)  |  Updated: October 15, 2019 14:56 IST

Reddit
Low-Calorie Diet For Weight Loss Has Different Effects In Men And Women; Says Study

குறைந்த கலோரி உணவின் காரணமாக எடை இழப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு நிலைகளில் உள்ளது.

லோ கலோரி டயட் மூலம் உடல் எடையைக் குறைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு விளைவுகள் ஏற்படுகிறது என ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

எடையைக் குறைக்க பின்பற்றப்படும் உணவு முறை என்பது கண்டிப்பாக அதிக கொழுப்பு கொண்ட உனவுகளை தவிர்ப்பதாகவும், குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்பும் ஆண்களோ பெண்களோ, யாராக இருந்தாலும் இந்த விதியையே பின்பற்றுகின்றனர். ஆனால், லோ கலோரி டயட் முறையை பின்பற்றுவதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விளைவுகளை உண்டாக்கும் என்பதை யாரும் அறிவதில்லை. இதையே, சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவும் கூறுகிறது.

லோ கலோரி டயட் மூலம் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு பாதிப்புகள் வருகிறது என டயாபெட்டிஸ், ஒபிசிட்டி மற்றும் மெட்டபாலிசம் ஆகிய பத்திரிகைகளில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், உடல் எடை மட்டும் குறைவதில்லை, அதைத் தவிர வெவ்வேறு உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து கலவைகளால் ஏற்படும் விளைவுகள் இரு பாலினத்தவருக்கும் நோய்களைத் தரும்.

இந்த ஆய்வினை கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு அதிக எடை கொண்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் என 2000 பேரை கொண்டு ஆய்வு செய்தது. அவர்கள் அனைவரையும் 2 மாதங்களுக்குக் குறைந்த கலோரிகளைக் கொண்ட குறிப்பிட்ட உணவுகளையே பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பெண்களை விட ஆண்களின் உடல் எடை அதிக அளவில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களின் உடலில் நீரிழிவு நோய்களுக்கான  அறிகுறிகள், கொழுப்பு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவை கணிசமாக குறைந்திருப்பதையும் தெளிவாக காட்டியது.

“எடைக் குறைப்பில் உள்ள வித்தியாசங்களை சரிசெய்த போதிலும், பெண்களை விட ஆண்களே அதிகம் பயணடைந்துள்ளனர்” என கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் டாக்டர் பியா சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த ஆய்வில், ஆண்களோடு ஒப்பிடும் போது, பெண்களுக்கு எச்டிஎல் கொழுப்பு, இடுப்பின் சுற்றளவு, மெலிந்த உடல் நிறை மற்றும் நாடித் துடிப்பின் அழுத்தம் ஆகியவை குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

“வெவ்வேறு பாலினங்களுக்கிடையே நீண்ட கால ஆய்வுகளிலும் இதேபோன்ற நிலை நீடிக்குமா, அல்லது பாலினங்களை பொறுத்து வேறு விதமான ஆய்வு முறைகளை பின்பற்ற வேண்டியிருக்குமா என அறிய ஆர்வமுடன் இருக்கிறோம்” என டாக்டர் பியா கூறியுள்ளார்.

இது போன்ற ஆய்வுகள் மூலம் எவ்வாரு ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனியாக உணவு திட்டங்களை பின்பற்றவேண்டும் என்பதையும், உடல் எடையைக் குறைக்க சரியான முறையைத் தெரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com