கலோரிகள் குறைந்த வெஜிடேரியன் ரெசிபிகள்!!!!

  புரதம், நார்ச்சத்து மற்றும் கலோரிகள் மிகவும் குறைவான உணவை தொடர்ச்சியாக சாப்பிட்டால் தொப்பையை குறைக்கலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 29, 2019 17:36 IST

Reddit
Weight Loss: Low-Calorie Healthy Vegetarian Recipes For You To Lose Weight
Highlights
  • குறிப்பிட்ட டயட் உணவுகளை சாப்பிடும்போது உடல் எடை குறையும்.
  • காலையில் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி குடித்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
  • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

பெரும்பாலான பெண்களுக்கும், ஒரே இடத்திலிருந்தே வேலை செய்பவர்களுக்கு தொப்பை விழுந்துவிடும்.  தற்போதைய உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை மாற்றத்தால் தொப்பை விழுந்து உடல் அமைப்பே மாறிப்போகிறது.  உடலை உறுதியாக வைத்து கொள்ள உடற்பயிற்சி மற்றும் யோக பயிற்சி ஆகியவை செய்யலாம்.  ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்வதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் கலோரிகள் குறைந்த உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவதால் உடல் எடை குறைவது நிச்சயம்.  புரதம், நார்ச்சத்து மற்றும் கலோரிகள் மிகவும் குறைவான உணவை தொடர்ச்சியாக சாப்பிட்டால் தொப்பையை குறைக்கலாம். ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி:

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதனால் காலை நேரத்தில் இதனை குடித்து நாளை தொடங்கலாம்.  ஓட்ஸ், ஆளிவிதை, சியா விதை மற்றும் வாழைப்பழம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தியில் வெல்லம் மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம்.  நீங்கள் விரும்பினால் மேலும் இதில் யோகர்ட் மற்றும் பால் சேர்த்து கொள்ளலாம்.  இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.  இதனை தயார் செய்வது மிகவும் எளிமையானது. 

ராகி - ரவா தோக்லா:

சமோசா மற்றும் பக்கோடா சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் அதிகம் சேரும்.  அதற்கு பதிலாக, ராகி மாவு, ரவை, யோகர்ட், ஃப்ரூட் சால்ட், கடுகு, எள், துருவிய தேங்காய் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ராகி ரவா தோக்லாவை சாப்பிடலாம்.  இதனை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.  இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். புலாவ்:

கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, முந்திரி மற்றும் திராட்சை ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த புலாவ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.  இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்து மிக குறைவு.  உடல் எடை குறைக்க இம்மாதிரியான ரெசிபிகளை சாப்பிட்டு வரலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement