லோ-கார்ப் டயட்டை பின்பற்றுவதால் என்ன நன்மை?

கார்போஹைரேட் குறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய பயன்கள் உண்டு. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 25, 2019 14:58 IST

Reddit
Low-Carb Diets May Lower Diabetes Risk Even In Absence Of Weight Loss: Study

கார்போஹைரேட் குறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய பயன்கள் உண்டு.  உடல் எடை குறைப்பு துவங்கி இரத்த சர்க்கரை வரை அனைத்தையும் சரிசெய்ய கூடிய தன்மை இந்த லோ-கார்ப் டயட்டிற்கு உண்டு.  குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகபடியான பலன் கொடுக்கும் இந்த லோ-கார்ப் டயட்டின் மேலும் சில நன்மைகள் குறித்து பார்ப்போம்.  மெட்டபாலிக் சின்றோமின் அறிகுறிகளை குறைக்கிறது.  உடல் பருமனாக இருப்பவர்களிடம் இந்த டயட்டை பின்பற்ற செய்ததிலும் நல்ல பலன் கிடைத்தது. இந்த மெட்டபாலிக் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பருமன், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.  இந்த சின்றோம் உள்ள 16 ஆண்கள் மற்றும் பெண்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு பக்கவாதம், இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால் போன்ற உடல் உபாதைகளுக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து, அவர்களுக்கு லோ-கார்ப் டயட் கொடுக்கப்பட்டது.  இந்த டயட்டை பின்பற்றிய பிறகு அந்த பரிசோதனையில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மெட்டபாலிக் சின்றோம் குறைந்தது தெரிய வந்தது.  ஆகையால், கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளையே எப்போது சாப்பிட தயாராகுங்கள்.  நோய்கள் உங்களை நெருங்காமல் பார்த்து கொள்ளுங்கள்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com