மதிய உணவிற்கு சிக்கன் சாலட் சாப்பிடலாம்!!

மற்ற இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கிறது.  இதனால் இருதய நோய்கள், கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 15:16 IST

Reddit
High-Protein Diet: Low-Carb Minced Chicken Salad Recipe For Lunch
Highlights
  • சிக்கனில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.
  • புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • பீனட் பட்டர் மற்றும் சாஸில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது.

புரதம் நிறைந்த உணவுகளுள் சிக்கனும் ஒன்று.  மற்ற இறைச்சிகளுக்கு பதிலாக சிக்கன் சாப்பிடலாம்.  மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய சிக்கனில் புரதம் நிறைவாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கிறது.  மற்ற இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கிறது.  இதனால் இருதய நோய்கள், கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.  லோ-கார்ப் டயட்டை பின்பற்றுபவர்களும் சிக்கன் சாப்பிடலாம்.  தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் புரத உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  

lj2b6hk8 

 

மின்ஸ்டு சிக்கன் சாலட் ரெசிபியில் புரதம், தாதுக்கள், வைட்டமின் போன்றவை நிறைந்திருக்கிறது.  இத்துடன் கார்போஹைட்ரேட் குறைவான காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். இந்த சாலட்டை ஸ்வீட் சில்லி சாஸ், சோயா சாஸ், இஞ்சி, பீனட் பட்டர், கொத்தமல்லி மற்றும் காய்ந்த மிளகாய் கொண்டு ருசியானதாக தயாரிக்கலாம்.  இந்த சாலட் கலோரிகள் குறைந்ததாக இருக்க வேண்டுமென்றால் சாஸ் மற்றும் பீனட் பட்டரை தவிர்க்கலாம்.  ஏனென்றால் இவற்றில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது.  

எப்படி தயாரிக்கலாம்: 

1. ஒரு தவாவில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.  பின் அதில் வெங்காயம், பூண்டு, சிக்கன், உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்கி கொள்ளவும். 

2. அதில் நறுக்கிய கேரட், முட்டைக்கோஸ், க்ரீன் ஆனியன் ஆகியவற்றை சேர்த்து, காய்கறிகள் வேகும்வரை வைத்திருக்கவும். 

3. ஒரு சின்ன பௌலில் ட்ரெஸ்ஸிங் செய்வதற்கு தேவையானவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  

4. கலந்து வைத்துள்ளதை தவாவில் சேர்த்து கொள்ளவும்.  பின் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். 

 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com