மெட்ராஸ் டே: சென்னையில் இந்த 5 உணவுகளை நீங்கள் நிச்சயம் சாப்பிட்டு பார்க்க வேண்டும்

வங்கக் கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த சிங்காரச் சென்னைக்கு வயது 379. அதைக் குறிக்கும் வகையில் இன்று மெட்ராஸ் டே கொண்டாடப்படுகிறது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: August 22, 2018 16:19 IST

Reddit
Madras Day: Top 5 Local Foods To Try Out In Chennai

வங்கக் கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த சிங்காரச் சென்னைக்கு வயது 379. அதைக் குறிக்கும் வகையில் இன்று மெட்ராஸ் டே கொண்டாடப்படுகிறது.

சென்னையின் அடையாளம் பன்முகத்தனமை. வேலை தேடி சென்னைக்கு வருவோரை அரவணைத்து வரவேற்கிறது இந்த மெட்ரோ நகரம். தமிழகம் மட்டும் அல்ல இந்திய அளவில் பல கலாச்சாரம் கொண்ட மக்கள் சென்னையை வசிப்பிடமாக கொண்டிருக்கின்றனர். பன்முகத்தன்மை சென்னைக்கு வண்ணம் சேர்க்கிறது. இந்த பன்முகத் தன்மை சென்னையின் உணவு வகைகளிலும் நம்மால் பார்க்க முடியும். உணவுக்கென்று சிறப்பு பெயர் பெற்று வருகிறது சென்னை. குறிப்பாக சென்னையில் கிடைக்கும் உள்ளூர் உணவு வகைகளுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் நீங்கள் தவர விடக் கூடாத 5 உணவு வகைகளை சற்று அலசுவோம்.

1. சுண்டல்:

மெரினாவின் ட்ரேட் மார்க் உணவு வகை இந்த சுண்டல். மெரினா கடற்கரையில் காற்று வாங்குகிறார்களோ இல்லையோ, நிச்சயம் சுண்டல் வாங்குவார்கள். கருப்பு சுண்டலை சன்னாவாக்கி ஹோட்டல்களில் விற்கப்பட்டாலும், வெள்ளை சுண்டல் தான் மக்கள் விரும்பி உண்கின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tija Foods (@teasturmericandspices) on

2. ஃபில்ட்டர் காபி:

உலகம் முழுவதும் காபிக்கு ரசிகர்கள் இருந்தாலும், சென்னையின் ஃபில்ட்டர் காபிக்கு வெறி பிடித்த ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சர்வதேச அளவில், ரெஸ்டாரென்டுகளின் மெனு கார்டுகளில் இடம் பிடித்திருக்கிறதென்றால் இது தரும் சுவையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by

3. நெத்திலி வருவல்:

சுவையான, மொறு மொறுப்பான இந்த நெத்திலி வருவல், கடல் உணவு விரும்பிகளின் ஃபேவரைட் உணவு. நெத்திலிய காரசாரமான மசாலாவில் முக்கி எடுத்து வருத்து சாப்பிட்டபடி, கிழக்கு கடற்கரையோரம் உட்கார்ந்து கொண்டு ஒரு பொன் மாலையை ரம்மியமாக கழிக்கலாம்.

 

Recipe: Nethili Meen Varuval / Anchovies Fry Recipe Link - https://madraasi.com/2018/06/15/nethili-fry-anchovy-fish-fry-nethili-meen/ or refer www.madraasi.com Nethili Fry is also known as Nethili 65 or Anchovies fry is one among the most popular starter in Tamil Nadu restaurants. Nethili fry is where the nethili / anchovies fish is fired deep in the oil to a crispy texture where the bones are also consumed along with the fish. #madraasi #immadraasi #nethilifry #nethilimeenvaruval #food #recipes #cooking #nonvegetarian #foodblogger #bangaloreblogger #indianfood #foodshots #foodtalkindia #tamilcuisine #homecooking #eeeeeats #foodstyling #feedfeed #foodoftheday #anchoviesfry #foodiefriday #likestagram #foodpics #weekendvibes #goodnight

A post shared by Madraasi (@immadraasi) on

4. முருக்கு சாண்ட்விச்:

முருக்கு என்பது தமிழகத்துக்கே பொதுவான ஒரு தீணி வகை. ஆனால் சென்னையில் ஒரு கடையில் அதை சாண்ட்விச்சோடு சேர்த்து அட்டகாசமாக பரிமாறப்படுகிறது. முருக்கு, வெள்ளரி, தக்காளி, வெங்காயம் மற்றும் சீஸ் சேர்த்து கிறிஸ்பி, டேஸ்டி முருக்கு சாண்டிவிச் சமைக்கப்படுகிறது.

5. அத்தோ:

சென்னையின் மிகப் பிரபலமான சாலையோர உணவு அத்தோ. பர்மாவில் இருந்து இந்த தென்கோடி மாநிலத்தின் தலை நகரை வந்தடைந்துள்ளது. முதலில் சென்னை பீச் ரயில் நிலையம் அருகே தொடங்கிய இந்த அத்தோ கடை, இப்போது சென்னையின் பல இடங்களில் கிடைக்கிறது. மொறு மொறுப்பாக ஃபிரை செய்யப்பட்ட நூடுல்ஸில், வாழத்தண்டு சூப் சேர்த்து குடித்தால் வாழ்வில் மறக்க முடியாத சுவையாக நினைவில் இருக்கும்.உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement