இந்தியாவில் அறுவடைத் திருநாளை எப்படி கொண்டாடுகிறார்கள்...?

இந்த நாளை சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், அறுவடைத் திருநாளாகவும் இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படும்.

Sushmita Sengupta  |  Updated: January 18, 2019 17:17 IST

Reddit
Makar Sankranti 2019, Lohri 2019, Pongal 2019, What To Eat This Festive Season

இந்தியா என்றாலே அது விழாக்களின் நிலமாகத்தான் உள்ளது. ஆண்டு முழுவதும் இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் கொண்டாட்டமான விழா நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதோ நாளை முதல் பல மாநிலங்களில் விழாவிற்கான கொண்டாட்டம் தொடங்கப் போகிறது. இந்த நாளை சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், அறுவடைத் திருநாளாகவும் இந்தியாவின்  பல மாநிலங்களில் கொண்டாடப்படும். தமிழகத்தில் பொங்கல் திருநாளாகவும், பஞ்சாப்பில் லோஹிரி விழாவாகவும், அசாமில் போகல் பிகுவாகவும், போஷ் சங்கராந்தியாக பெங்காலிலும், மகர் சங்கராந்தியாக பல மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

அறுவடைத் திருநாளை, பல்வேறு சுவையான உணவுகளைத் தயாரித்து அதை அக்கம்பக்கத்தாருக்கு கொடுத்து கொண்டாடுவது வழக்கம். பாரம்பரிய பண்டிகை நாளில் எந்த மாநிலத்தில் என்ன சுவையான உணவை செய்வார்கள் என்பதைப் பார்க்கலாமா...

மகர் சங்கராந்தி 2019 (Makar Sankranti 2019)

டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், பெங்களூர், மற்றும் ஒரிசா போன்ற மாநிலங்களில் மகர் சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புதிய உடைகளை உடுத்தி கொண்டாடுவார்கள். அலகாபாத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதிக்கரையில் கூடி இறைவனை வணங்குவார்கள். உத்தரகண்ட்டில் நெய்யில் பலகாரங்களை செய்வது வழக்கம். சங்கராந்தி நாளில் சுவையான லட்டுகளை வெல்லம் கலந்து செய்வது வழக்கம். மகாராஷ்டிராவில் வெல்லம் கலந்த பூரண் போலி செய்வது வழக்கம். வெல்லமும் எள் கலந்து செய்த லட்டு, பொறி உருண்டை ஆகியவை செய்வது வழக்கம். 

வங்காளத்தில் வெல்லமும் தேங்காய் கலந்து செய்த பூரணக் கொலுக்கட்டை, ரசகுல்லா, பாயாசம் போன்ற சுவையான உணவுகளை செய்வார்கள். குஜராத்தில் ருசியான மசாலாக்களை கலந்து காய்கறிகளைக் வைத்து சுவையான உணவுகளை செய்வது வழக்கம்.

til ladoo

லோஹிரி 2019 (Lohri 2019)

பாப்கார்ன், ரெவாரி, கஜாக், சிக்கி, மற்றும் வேர்க்கடலை போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் செய்து சாப்பிடுவார்கள். குடும்பத்தோடு இரவு உணவை சேர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பஞ்சாபில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. டெல்லி மற்றும் ஹிமாச்சல பிரதேசப் பகுதியில் மக்கள் பெரிய அளவில் விறகுகளை குவித்து தீ மூட்டி அதைத் சுற்றி பாட்டுப் பாடி ஆடி மகிழ்வார்கள்.
 

n70si4fo

 

பொங்கல் 2019 (Pongal 2019)

தமிழ்நாட்டில் ஜனவரி 15-ம் தேதி அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயத்துக்கு உதவிய சூரியன் முதல் பசு மாடுகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழாவானது கொண்டாடப்படுகிறது. இந்த  பொங்கல் நாளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு வெட்டி கொண்டாடுவது வழக்கம்.
 

mav4tod

அனைவருக்கும் பொங்கல், லோஹிரி, மகர் சங்கராந்தி வாழ்த்துகள்
 

CommentsAbout Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Related Recipe

Advertisement
Advertisement