இனி வீட்டிலேயே வே ப்ரோட்டீன் தயாரிக்கலாம்!!

வே ப்ரோட்டீனை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சீராகும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 29, 2019 12:32 IST

Reddit
High-Protein Diet: Make Natural Whey Protein At Home For A Healthy Body
Highlights
  • வே புரதத்தில் 22 வகையான அமினோ அமிலங்கள் உள்ளது.
  • பால் மற்றும் தயிரில் இருந்து வே ப்ரோட்டீன் தயாரிக்கப்படுகிறது.
  • வீட்டிலேயே இதனை செய்து பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானது புரதம்.  உடலுக்கு தேவையான புரதம் கிடைத்தால் மட்டுமே தசைகள், கூந்தல் மற்றும் எலும்புகள் உறுதியாக இருக்கும்.  பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி, சோயா பீன்ஸ் போன்ற உணவுகள் புரதம் நிறைந்தவை.  நம் உடலின் புரத தேவையை பூர்த்தி செய்வதற்காக சிலர் வே ப்ரோட்டீன் எடுத்துக் கொள்வது வழக்கம்தான்.  ஆனால் மார்கெட்களில் கிடைக்கக்கூடிய வே ப்ரோட்டீன் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தன்மை கொண்டது.  வீட்டிலேயே வே ப்ரோட்டீன் எப்படி தயாரிக்கலாம் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்துதான் இந்த கட்டுரை.  

4jcu568k

 

எப்படி தயாரிக்கலாம்: 
* ஒரு பௌலை எடுத்து அதன் மேல் வடிகட்டியை வைத்து கொள்ளவும். 
* அதன் மேல் சீஸ் க்ளாத் அல்லது முஸ்லின் துணியை வைத்து கொள்ளவும். 
* அந்த துணியின் மேல் தயிர் சேர்த்து ப்ளாஸ்டிக் கொண்டு மூடி வைக்கவும். 
* இதனை 8 முதல் 9 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். 
* சில மணிநேரங்களுக்கு பிறகு பௌலில் மஞ்சள் நிற திரவம் சேர்ந்திருக்கும்.  அத்துடன் முஸ்லின் துணியில் தயிர் போல் படிந்திருக்கும்.  
* பௌலில் சேர்ந்திருக்கும் அந்த திரவம்தான் வே ப்ரோட்டீன்.  
 

02f1qjtg

 

ஆரோக்கிய நன்மைகள்: 
வே புரதத்தில் அமினோ அமிலம் அதிகமாக இருக்கிறது.  இதனை சாப்பிடுவதால் உடலில் தசைகள் உறுதியாக இருக்கும்.  உடல் எடை குறைக்க இதனை உட்கொள்ளலாம்.  மற்ற புரத உணவுகளை விட வே ப்ரோட்டீனை உடல் எளிதில் ஜீரணித்துவிடும் என்பதால் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும்.  வே ப்ரோட்டீனை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சீராகும்.  

வீட்டிலேயே செய்யக்கூடிய வே ப்ரோட்டீனை ஃப்ரிட்ஜிலேயே 3 முதல் 4 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.  இது சுவையற்றதாக இருக்கும் என்பதால் உங்களுக்கு பிடித்த ஃப்ளேவரை சேர்த்து சாப்பிடலாம்.  Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement