தயிர் கலந்த கோதுமை தோசை சாப்பிட்ட அனுபவம் உண்டா? இந்த ரெசிபியை ட்ரை செய்யவும்!

கோதுமை தோசை கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பிரபலமான உணவாகும். இது கர்நாடகாவில் ‘கோதி தோசை” என்றும் அழைக்கப்படுகிறது.

NDTV Food  |  Updated: April 06, 2020 23:15 IST

Reddit
Make South Indian Godhuma Dosa In Its Traditional Form With This Quick And Easy Recipe

தென்னிந்திய தோசை: கோதுமா தோசை வீட்டிலேயே விரைவாக தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் சட்னியுடன் ஒரு தென்னிந்தியத் தோசை உணவு நம் நாளை உடனடியாக தொடங்கலாம். நீங்கள் ஒரு தீவிர தோசை விரும்பியானால், எல்லா வகையான தோசைகளையும் முயன்றீர்கள் என்று நினைத்தால், மீண்டும் சரிபார்க்கவும். பாரம்பரிய கோதுமை தோசை இன்னும் முயற்சி செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால், உடனே செய்யுங்கள்! கோதுமை தோசை கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பிரபலமான உணவாகும், இது கோதுமை மாவுடன் தயாரிக்கப்படுகிறது. இது கர்நாடகாவில் ‘கோதி தோசை” என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமான தோசை செய்ய, நீங்கள் முன்கூட்டியே மாவை அரைத்து வைக்க வேண்டும் அல்லது ஒரு இரவு முழுவதும் பருப்பை ஊறவைக்க வேண்டும்; கோதுமை தோசை விஷயத்தில் நீங்கள் அதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை.ஆமாம், கோதுமை தோசை என்பது ஒரு உடனடி செய்யக் கூடிய உணவாகும், இது சிறிது நேரத்தில் எளிதாகச் செய்ய முடியும். எனவே, அவசர அவசரமாகக் கிளம்ப வேண்டியிருந்தால், இந்த விரைவான மற்றும் எளிதான உடனடி தோசை செய்முறை மீட்புக்கு வரும். இது முழு கோதுமை மாவுடன் தயாரிக்கப்படுகிறது, இது ஒப்பீட்டளவில் ஆரோக்கியமான தானியமாகும். இது ஃபைபர் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளால் நிறைந்துள்ளது. மேலும் பல மேக்ரோ மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

njpncq6g

கோதுமை தோசை செய்யத் தேவையான பொருட்கள்:

 1. 1 கப் முழு கோதுமை மாவு

 2. 1 வெங்காயம், நறுக்கியது

 3. 2 தேக்கரண்டி தயிர்

 4. 1 பச்சை மிளகாய், நறுக்கியது

 5. கறிவேப்பிலை சிறிதளவு நறுக்கியது

 6. தேவையான அளவு உப்பு

 7. 1 தேக்கரண்டி எண்ணெய்

செய்முறை:

 • கோதுமை மாவு மற்றும் தயிர் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, மிருதுவாக கலக்கவும்

 • உப்பு சேர்த்து, மாவை ஓரிரு மணி நேரங்கள் அப்படியே வைக்கவும்

 • மற்ற பொருட்களைச் சேர்க்கவும் - வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் மிளகாய். நன்கு கலக்கவும், தேவையென்றால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்

 • தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டியில் மாவை எடுத்து, வழக்கமான தோசை ஊற்றுவது போல் ஊற்றவும். மீதமுள்ள மாவையும் அவ்வாறே செய்து பரிமாறவும்.

இந்த செய்முறையில் இரண்டு முதல் மூன்று தோசைகள் செய்யலாம். நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பப்படி ஆலு அல்லது பன்னீரைத் தோசை திணிக்கலாம். இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கோதுமா தோசை உங்களுக்குப் பிடித்த தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம். தேங்காய் சட்னி தயாரிக்க உங்களுக்கு நேரம் இல்லையென்றால், தோசையை வழக்கமான பச்சை சட்னி அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com