வீட்டிலேயே சீஸ் சிப்ஸ் எப்படி தயாரிக்கலாம்!!

கோட் சீஸில் புரதம், காப்பர், கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.  உடலுக்கு நல்ல கொலஸ்ட்ராலை கொடுத்து ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.  

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 19, 2019 12:04 IST

Reddit
Weight Loss Diet: Make These Easy Keto-Friendly Cheese Chips At Home (Watch Recipe Video)
Highlights
  • புரதமும் கொழுப்பும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
  • மொருமொருப்பான சீஸ் சிப்ஸை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
  • மாலை நேர பசியை போக்க இதனை சாப்பிடலாம்.

உடல் எடை குறைப்பிற்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் எளிமையான மற்றும் பயனுள்ள டயட்டாக கீட்டோ டயட் இருக்கிறது.  இதனை பின்பற்றியவர்களுக்கு கட்டாயமாக உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.  கார்போஹட்ரேட் குறைவான மற்றும் கொழுப்பு சத்தும் புரதம் அதிகமான உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது உடல் எடை தானாகவே குறைகிறது.  பட்டர் மற்றும் சீஸ் ஆகிய இரண்டுமே கீட்டோ உணவுகள் தான்.  இவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபிகளை சாப்பிடும்போது உடல் எடை குறைவது உறுதி.  தற்போது சீஸ் சிப்ஸ் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம். 

உடல் எடை குறைக்கும்போது உங்களால் உங்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்,மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட முடியாது.  அதற்கு பதிலாக, கோட் சீஸில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.  கோட் சீஸில் புரதம், காப்பர், கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.  உடலுக்கு நல்ல கொலஸ்ட்ராலை கொடுத்து ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.   

Newsbeep

தேவையான பொருட்கள்: 

கோட் சீஸ் - தேவையான அளவு 

செடர் சீஸ் - 50 கிராம் 

செய்முறை: 

கோட் சீஸை மெல்லிசான துண்டுகளாக வெட்டி அதனை தவாவில் வைத்து பொரிக்கவும்.  2--3 நிமிடங்களுக்கு பிறகு அதனை திருப்பி போட்டு மீண்டும் சிறிது நேரம் பொரித்து எடுக்கவும். 

 ஒரு தட்டில் செடர் சீஸை துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.  அதில் ஆனியன் பொடி சேர்த்து கலந்து ஃப்ரையின் பேனில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு மொருமொருப்பாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

கோட் சீஸ் சிப்ஸ் மற்றும் செடர் சீஸ் சிப்ஸ் ஆகிய இரண்டு கீட்டோ உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம்.  இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement