குட்டு பப்டி சாட் தயாரிப்பது எப்படி??

மரக்கோதுமை, செஸ்ட்நட் மாவு ஆகியவை கொண்டு தயாரித்து சாப்பிடலாம்.  இந்த மாவு கொண்டு பூரி அல்லது ரொட்டி தயாரித்து சாப்பிடலாம்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: October 01, 2019 16:53 IST

Reddit
Navratri 2019: Make This Healthy Kuttu Papdi Chaat For Evening Hunger
Highlights
  • ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது மரக்கோதுமை.
  • இந்த ரெசிபியை பேக் செய்து சாப்பிடலாம்.
  • தயிர், மாதுளை, இஞ்சி ஆகியவை சேர்த்து சாப்பிடலாம்.

வருடத்தில் இரண்டு முறை நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது வீடுகளில் விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கப்படுவது வழக்கம்.  வழக்கமான கோதுமை, மைதா மற்றும் ரீஃபைண்டு மாவு கொண்டு பலகாரங்கள் தயாரிக்காமல் மரக்கோதுமை, செஸ்ட்நட் மாவு ஆகியவை கொண்டு தயாரித்து சாப்பிடலாம்.  இந்த மாவு கொண்டு பூரி அல்லது ரொட்டி தயாரித்து சாப்பிடலாம்.  இவற்றை கொண்டு ஆரோக்கியமான சாட் ரெசிபி எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  ed9vvuh

 

மரக்கோதுமை, யோகர்ட், மாதுளை, இஞ்சி போன்றவற்றை கொண்டு சுவையான மற்றும் ஆரோக்கியமான சாட் ரெசிபியை தயாரிக்கலாம்.  பொதுவாக பப்டி எண்ணெயில் பொரிக்கப்படும் ரெசிபி.  ஆனால், இந்த ரெசிபியை பேக் செய்து சாப்பிடலாம்.  இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறதென்று பார்ப்போம்.  

தேவையானவை: 
மரக்கோதுமை - 1/2 கப் 
தயிர் - 1/2 கப் 
உருளைக்கிழங்கு - 1 
துருவிய இஞ்சி - 1/2 துண்டு 
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி 
கல் உப்பு - சுவைக்கேற்ப 
மாதுளை - ஒரு கைப்பிடி 
புளிச்சட்னி - தேவையான அளவு 

Listen to the latest songs, only on JioSaavn.com

kuttu ki poori

 

செய்முறை: 
முன்கூட்டியே புளிச்சட்னியை தயாரித்து கொள்ளவும்.  
மரக்கோதுமை, உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்து மாவு தயாரித்து கொள்ளவும். 
பிசைந்து வைத்த மாவை மெல்லிசாக தேய்த்து கொள்ளவும்.  பின் ஒரு பாத்திரத்தை வைத்து, ஒரே மாதிரியான வடிவத்தில் ரொட்டியை வெட்டி எடுத்து கொள்ளவும்.  
பின் அதனை 180 டிகிரியில் வைத்து 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.  
ஒரு பெரிய பௌலில் மரக்கோதுமை, தயிர், சட்னி, உப்பு, வேகவைத்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள், துருவிய இஞ்சி மற்றும் மாதுளை ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement