ஹேப்பி மீல்ஸில் பிளாஸ்டிக் பொம்மைகளை மாற்ற மெக்டொனால்ட்ஸ் திட்டம்!

நிறுவனம், புதிய பொம்மைகளை மே மாதத்திலிருந்து பரிசோதிக்கத் தொடங்கும். பெற்றோர்களும் குழந்தைகளும் ஒரு பிளாஸ்டிக் பொம்மைகளை, உணவு வாங்க வரும்போது, ஒரு புத்தகம் அல்லது காகித பொம்மைகளாக  மாற்றிக் கொள்ளலாம்.

आईएएनएस  |  Updated: March 18, 2020 10:14 IST

Reddit
McDonald's to replace plastic toys in Happy Meals

அமெரிக்க துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ், அதன் புகழ்பெற்ற ஹேப்பி மீல்ஸ் பொம்மைகளை அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் அல்லாத பதிப்புகளுடன் மாற்ற உள்ளது. ஏனெனில் அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்க முயல்கிறது என்று ஒரு ஊடக அறிக்கை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

2021 முதல் ஹேப்பி மீல்ஸ், ஒரு மென்மையான பொம்மை, ஒரு புத்தகம் அல்லது காகித அடிப்படையிலான பொம்மையுடன் வரும் என்று வர்த்தகம் கூறியது என்று லண்டனைத் தளமாகக் கொண்ட மெட்ரோ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

துரித உணவு நிறுவனம், இந்த முயற்சி 2021ம் ஆண்டு முதல் தனது இங்கிலாந்து வணிகத்தில் 3,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கை மிச்சப்படுத்தும் என்று நம்புகிறது. இது இன்றுவரை அதன் மிகப்பெரிய பிளாஸ்டிக் குறைப்பு ஆகும்.

நிறுவனம், புதிய பொம்மைகளை மே மாதத்திலிருந்து பரிசோதிக்கத் தொடங்கும். பெற்றோர்களும் குழந்தைகளும் ஒரு பிளாஸ்டிக் பொம்மைகளை, உணவு வாங்க வரும்போது, ஒரு புத்தகம் அல்லது காகித பொம்மைகளாக  மாற்றிக் கொள்ளலாம்.

இது ஒவ்வொரு கடையிலும் உள்ள பிளாஸ்டிக் பொம்மைகளைத் தேர்வுசெய்ய வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்.

நிறுவனம், கடந்த 10 ஆண்டுகள் இறுதிக்குள் உமிழ்வை 36 சதவிகிதம் குறைப்பதற்கும், 2025க்குள் மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது புதுப்பிக்கத்தக்கப் பொருட்களை அதன் அனைத்து பேக்கேஜிங்கிலும் பயன்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளது என்று மெட்ரோ செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிறுவனம், தனது மெக்ஃப்ளரி ஐஸ்கிரீம்களிலிருந்து மூடிகளை அகற்றி, 385 டன் பிளாஸ்டிக்கை சேமித்தது. அதன் சாலட் பாக்ஸ்களைக் காகிதமாக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுடன் மாற்றியது. கடந்த ஆண்டு காகித ஸ்ட்ராக்களை தயாரித்தது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com