மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள்!

மாதவிடாய் காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளும் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது

  |  Updated: August 13, 2020 15:14 IST

Reddit
Menstrual Diet: Expert Tips, Dos And Don'ts For Healthy And Comfortable Periods
Highlights
  • மாதவிடாய் காலத்தில் உணவுகள் முக்கியப்பங்கு வகிக்கிறது
  • உணவுகளைத் தவிர்க்கக் கூடாது
  • சாப்பிடும் போது ஒழுங்காக அமர்ந்து சாப்பிட வேண்டும்

மாதாந்திர கால சுழற்சி என்பது அனைத்துப் பெண்களும் சிறிது தர்மசங்கடத்திற்கு உள்ளாகி சோர்வடைவார்கள். குடல் பிடிப்புகள், வீக்கம், அஜீரணம், மார்பகம் கனத்து போதல், குமட்டல், பசியின்மை போன்றவைகள் ஏற்படும். சிலருக்கு, இந்த அறிகுறிகள் லேசானவை, மற்றவர்களுக்கு இவை கடினமானதாக இருக்கும்.. இது நம் வாழ்வின் ஒரு பகுதியாகும், அவற்றைச் சமாளிக்க சில வழிகள் உள்ளன. அவற்றில் உணவு பழக்கவழக்கம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.  

பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கம்:

- தினமும் ஒரே மாதிரியான நேரத்தில் சாப்பிடுங்கள். இரவு 9 மணிக்குள்ளாக இரவு உணவை முடிக்க வேண்டும்.

- சாப்பாட்டுடன் ஒரு கிளாஸ் தண்ணீரை மட்டுமே குடிக்கவும், ஆனால் இடையில் 2-3 லிட்டர் வேண்டும்.

- உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

- உணவில் இலவங்கப்பட்டை, சான்ஃப், மெதி தானா போன்ற மசாலாப் பொருட்களுடன் சுவையைச் சேர்க்கவும். சிவப்பு மிளகாய் மற்றும் கரம் மசாலா போன்றவற்றையும் சேர்க்கலாம்.. அனைத்து மசாலாப் பொருட்களும் செரிமானத்திற்கு உதவுகின்றன.

- 30 நிமிடம் சிறது வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது பிடிப்புகளைப் போக்க உதவுகிறது.
 

oe8m161o

செய்யக்கூடாதவை:
- சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ், சர்க்கரை பானங்கள் மற்றும் வறுத்த உணவுகள் ஆகியவற்றை முடிந்த வரையில் தவிர்க்கவும்

- உணவைத் தவிர்க்க கூடாது. குறிப்பாக காலை உணவை தவிர்க்கவே கூடாது. மேலும், 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை உலர் பழங்கள், பாதாம் முந்திர, கடலை வகைககள் சாப்பிடலாம்.

- சாப்பிடும் போது ஒழுங்காக அமர்ந்து சாப்பிடவும். படுத்துக்கொண்டே சாப்பிடக்கூடாது. இதே போல், ஷோபாவில் சாய்நது கொண்டே சாப்பிடக் கூடாது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

போதுமான கால்சியம் மற்றும் ஒமேகா -3 நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது மாதவிடாய் அறிகுறிகளைப் போக்க உதவும். அறிகுறிகளை காலங்களிலிருந்து மாதவிடாய் நிவாரணம் வரை தினசரி ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். நல்ல உணவு பழக்க வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இயற்கையான பொருட்களை அடிப்படையாகக் கொண்ட வீட்டு வைத்தியம் பாதுகாப்பானது. Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement