மைக்ரோவேவ் அவனில் முட்டையை வைக்கலாமா??

மைக்ரோவேவ் அவனில் முட்டையை வைத்து வேக வைப்பதை தவிர்க்கலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 22, 2019 18:07 IST

Reddit
Cooking Hack Gone Wrong: Microwaved Eggs Explode In Woman's Face Burning Her Skin
Highlights
  • மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்தக்கூடிய உணவுகளை மட்டும் அதில் சமைக்கலாம்.
  • முகத்தில் காயம் ஏற்படும் அளவிற்கு முட்டை வெடித்திருக்கிறது.
  • சமைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வலைதளத்தில் இருக்கக்கூடிய குக்கிங் வீடியோஸ் பலவற்றை பார்த்து நாமும் வீட்டில் அதேபோல செய்து பார்த்திருப்போம்.  ஆனால் வலைதளத்தில் நாம் காணும் அனைத்தையுமே நம்மால் செய்து பார்க்க முடியாது.  விளைவுகள் தெரியாமல் அதனை முயற்சி செய்யும்போது, விபரீதம் ஏற்படக்கூடும்.  உதாரணமாக பிரிட்டனை சேர்ந்த 22 வயது பெண் வலைதளத்தை பார்த்து மைக்ரோவேவ் அவனில் எப்படி முட்டையை வேகவைப்பதென்று செய்து பார்த்திருக்கிறார்.  

பிதேனி காலை உணவை தயாரித்து கொண்டிருக்கையில் முட்டையை மைக்ரோவேவ் அவனில் வைத்து சமைக்க முடியுமா என்பதை சோதித்திருக்கிறார்.  அதனை தொடர்ந்து முட்டையை தண்ணீரில் போட்டு அத்துடன் உப்பு சேர்த்து மைக்ரோவேவ் அவனில் வைத்து வேக வைக்கலாம் என்று ஒரு ரெசிபி காணொலி இருந்திருக்கிறது.  அதேபோல அவரும் செய்திருக்கிறார்.  சில நிமிடங்கள் கழித்து அதனை எடுத்து முட்டை ஓடை உடைக்கும்போது, வெடித்து கண்களில் காயத்தை உண்டாக்கியது.  

 

அதன்பின், பிதேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சைக்கு பின்னும் அவரது கண்கள் வீக்கம் அடைந்திருந்தது.   வீக்கமும், காயமும் துளியும் குறையாத நிலையில் அவர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

 

boiled egg 

ஆகையால், சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளை பார்த்து எவ்வித அபாயத்திலும் மாட்டி கொள்ள வேண்டாம்.  பாதுகாப்பானதா என்று சோதிக்காமல் எதனையும் செய்ய வேண்டாம்.  

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement