இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க பால் குடிக்கலாம்!!

பால் பொருட்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் இருதய நோய்கள், மெட்டபாலிக் சின்றோம், குடல் அல்லது சிறுநீரக பை புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவை தடுக்கப்படுகிறது.

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: July 08, 2019 13:25 IST

Reddit
Milk, Dairy May Cut Risk Of Chronic Diseases Like Diabetes, Poor Heart Health: Study

பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ச்சியாக உட்கொண்டால் நாட்பட்ட நோய்களில் இருந்து தப்பலாம் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.  கற்பகாலத்தில், கர்ப்பிணிகள் தினமும் குறிப்பிட்ட அளவு பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வதால் குழந்தையின் எடை, உயரம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.  மேலும் வயது முதிர்ந்தவர்கள் தினமும் பால் மற்றும் பால் பொருட்களை சீரான அளவில் எடுத்து கொண்டால் உடல் பலவீனம் மற்றும் எலும்புகளில் தொய்வு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.  

பால் பொருட்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் இருதய நோய்கள், மெட்டபாலிக் சின்றோம், குடல் அல்லது சிறுநீரக பை புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவை தடுக்கப்படுகிறது.  மேலும் உடல் வளர்ச்சி, எலும்புகளின் அடர்த்தி, தசைகளின் வளர்ச்சி ஆகியவை சிறப்பாக இருக்கும்.  மேலும் கர்ப்ப காலம் மற்றும் பால் சுரப்பு ஆகியவற்றிற்கு பாலில் இருக்கக்கூடிய சத்துக்கள் மிகவும் அவசியமானது.  

பாலில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  புரதம், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சிங்க், செலினியம், வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி12 மற்றும் பெண்டோதெனிக் அமிலம் ஆகிய சத்துக்கள் பாலில் இருப்பதால் ஒட்டு மொத்த் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.  பால் பொருட்கள் மற்றும் பாலை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு எலும்பு மற்றும் இருதய நோய்கள் ஏற்பட அதிகபடியான வாய்ப்பு இருக்கிறதென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  
 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  MilkDiabetes

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement