புதினா இலைகள்

ஜல்ஜீரா எனப்படும் குளிர்ந்த கோடைக்கால பானம் புதினா இலைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது

एनडीटीवी  |  Updated: June 11, 2018 20:23 IST

Reddit
Mint Leaves
புத்துணர்ச்சி நறுமணம் மிக்க செடிகளில் ஒன்றாக புதினா உள்ளது. பச்சையாகவோ அல்லது காய்ந்தபடியோ உபயோகிக்கலாம்.பொதுவாக இந்தியாவில், புதினா சட்டினி அல்லது புதினா தேநீர் செய்வது வழக்கம். உலகிலேயே பழைய மற்றும் பெரும் பகுதிகளில் வளரும் செடியாக புதினா செடிகள் உள்ளன. ருசியும் மணமும் கொண்டது. மிளகு புதினா, ஸ்பியர்புதினா, ஆப்பிள் புதினா ஆகிய வகைகள் உள்ளன

பயன்பாடு

தென் ஆசிய பகுதிகளில் உள்ள உணவு வகைகளில் புதினா உபயோகிக்கப்படுகிறது. பருப்பு மற்றும் குழம்பு வகைகளில், நறுக்கிய புதினா இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில், ஜல்ஜீரா எனப்படும் குளிர்ந்த கோடைக்கால பானம் புதினா இலைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.குறிப்பு : புதினா இலைகள் வாங்கும் போது, சிறிய பச்சை நிற இலைகளை காய்ந்து இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். புதினாவின் புத்துணர்ச்சி இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும்.

ஊட்டச்சத்து குறிப்பு

புதினாவில் மெந்தால் உள்ளதால், இருதய வலி, செரிமானப் பிரச்சனை ஆகியவற்றுக்கு மருந்தாக அமையும்.வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்தது.  இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் சத்துகளும் அதிகம் உள்ளன. மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் தசை பிடிப்புகளும், வயிற்று வலியும் குணமடைய புதினா உதவும்.  புதினாவில் உள்ள மினரல்கள்  எலும்புகள் வலிமையாக உதவும். சீரான செரிமானத்திற்கு, தேநீருடன் காய்ந்த புதினா சேர்த்து குடிக்க வேண்டும். 

உங்களுக்கு தெரியுமா

Commentsமுற்காலத்தில், புதினா சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி அதிகம் இருக்கும் என ரோமானியர்கள் நம்பினார்கள் .2010 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டில் 71,300 ஏக்கர் புதினா செடிகள் அறுவடை செய்தனர். புதினாவின் நறுமணம் நிதானமடையச் செய்யும்.
 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement