இந்த மழைக்காலத்தில் எளிய கிச்சடியை சமைத்து சாப்பிடுங்கள்

இந்தியாவில் பிரதானமான எளிய உணவுகளில் கிச்சடியும் ஒன்று, இது மூங் தல் மற்றும் அரிசியால் செய்யப்படுகிற உணவு

Sarika Rana  |  Updated: July 18, 2018 22:46 IST

Reddit
Monsoon Care: Eat Simple Khichdi To Soothe Your Tummy This Rainy Season

இந்தியாவில் பிரதானமான எளிய உணவுகளில் கிச்சடியும் ஒன்று, இது மூங் தல் மற்றும் அரிசியால் செய்யப்படுகிற உணவு. இது மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்திகள் வலுவிழந்து உங்களுடைய வயிறு சரியாக இல்லாத சூழலில் அதை ஆற்றுப்படுத்த உதவுகிறது. வயிற்றுக் கோளாறு என்பது உணவு விஷத்தன்மை அடைவது, ஒரு வைரஸ் தொற்று, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய காரணங்களால் ஏற்படலாம். நீங்கள் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுவீர். கிச்சடியுடன் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உங்களுடைய செரிமான தடத்தை ஆற்றுப்படுத்தி, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. 

உங்களுடைய வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கிச்சடி சாப்பிடுவதற்கான காரணங்கள்

cu0oim7

 

மூங் தல் கிச்சடி வயிற்றிற்கு எளிய உணவு, ஆயுர்வேத முறையில் இது சக்தியளிக்கும் மற்றும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளதால் ப்ரானா தல் என்றழைக்கப்படுகிறது.

கிச்சடியில் சேர்க்கப்பட்டிருக்கும் மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி தன்மை கொண்டது, மற்றும் செரிமான அமைப்பை குணப்படுத்துவதற்கு பயன்படும் ஒரு மருந்தும் ஆகும். சிறிதளவு மஞ்சள் பல சுகாதார பிரச்சனைகளை தீர்க்கப் பயன்படுகிறது.

மூங் தல் அதிக அளவு புரோடீன் அளவு கொண்டுள்ளதால், வயிற்றிற்கு எளிதாக உள்ளது.

தயிருடன் சேர்த்து உண்டால் மூங் தல் கிச்சடி உணவை எளிதாக செரிக்க உதவுகிறது. இந்த இரண்டு உணவிலும் உள்ள சத்துக்கள் இதற்கு உதவுகின்றன.

கிச்சடி ஒரு முழுமையான உணவு, மூங் தல்லில் செரிமான நார்சத்துக்கள், வைட்டமின் சி, கேல்சியம், மெக்னிஸியம், பொட்டாசியம் மற்றும் ஃபாஸ்பரஸ் போன்றவை உள்ளன. நெய்யுடன் சேர்த்து உண்ணப்படும் ஃப்ரெஷாக சமைக்கப்படட் கிச்சடி சரியான அளவிலான மேக்ரோ-நியூட்ரியண்ட்ஸ், புரோடீன்ஸ் மற்றும் கொழுப்புகள் தருகிறது.

உங்களுடைய வயிற்றை ஆற்றுப்படுத்தி, பருவமழை கால இன்னல்களை போக்கும் மூங் தல் கிச்சடி செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 1/2 கப் மூங் தல்
  • 2 தேக்கரண்டி நெய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • சிறிதளவு பெருங்காயம்
  • 2 தேக்கரண்டி உப்பு

khichdi 625

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை சுத்தம் செய்து, தண்ணீரில் குறைந்தது 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி மற்றும் தனியாக எடுத்து வைக்கவும்.

கனமான கடாயில் நெய்யை காய்ச்சி, சீரகம் மற்றும் பெருங்காயத்தை சேருங்கள்

பின்னர் விதைகள் பிரிகிற போது, அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து, நன்கு கலந்து கூடுதல் நீர் ஆவியாகும் வரை அதிக வெப்பத்தில் வைத்து சமைக்க வேண்டும், 

உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இரண்டு 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும், ஒரு மூடியை கொண்டு கவர் செய்ய வேண்டும்

பின்னர் வெப்பத்தை குறைத்து பத்து நிமிடத்திற்கு விட வேண்டும். அந்த தருணத்தில் கிச்சடி தயாராகி பரிமாற தயாராக இருக்கும்.

அனைத்து பொறிக்கப்பட்ட உணவுகளில் இருந்தும் உங்கள் வயிற்றிற்கு விடையளித்து, இந்த பருவமழை காலத்தில் உங்களை ஆரோக்கியமான வைத்திருக்க உதவும் எளிய உணவான மூங் தல் கிச்சடி பயன்படுத்துங்கள்.
 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com