முருங்கையிலை தேனீரில் இவ்வளவு நன்மைகளா??

முருங்கைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.  உடலில் விக்கத்தை குறைத்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது.  இதனால் சருமம் பொலிவாகிறது.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 01, 2019 16:03 IST

Reddit
Moringa Tea: Fat Loss, BP Control And More Incredible Benefits Of This So-Called 'Miracle Tea'
Highlights
  • முருங்கையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
  • முருங்கையிலையில் டீ குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும்.
  • அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியது முருங்கையிலை.

டீ மற்றும் காபி போன்றவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இருக்கிறது.  அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்த்து மூலிகை பொருட்களை கொண்டு ஆரோக்கிய பானங்களை தயாரித்து குடிக்கலாம்.  அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது முருங்கைக்கீரை தான்.  இந்த முருங்கைக்கீரையில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.  இவை உடலுக்கு ஊட்டச்சத்துக்களை தருவதோடு ஆரோக்கியத்துடன் வைத்திருக்கிறது.  முருங்கைக்கீரையில் டீ குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய பலன்கள் இருக்கிறதென்பதை பார்ப்போம்.  



கொழுப்பு:

முருங்கையிலையில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.  இதில் கலோரிகள் மிக குறைவு என்பதால் உடல் எடை குறைக்க முருங்கையிலை டீ குடிக்கலாம். 



2ilqqre
 

இரத்த அழுத்தம்:

முருங்கையிலையை காயவைத்து பொடி செய்து வைத்து கொண்டு, அதில் டீ போட்டு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.  க்வர்செடின் என்னும் பொருள் முருங்கையிலையில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.  



kretvjmg 

சர்க்கரை:

முருங்கையில் ஆண்டிஆக்ஸிடண்ட் க்ளோரோஜெனிக் அமிலம், வைட்டமின் சி இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கையிலை சரியான தீர்வு. 



கொலஸ்ட்ரால்:

உடலில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இருதய நோய்களிலிருந்து காக்கிறது.  இருதய நோயாளிகள் அடிக்கடி முருங்கைக்கீரை டீ குடித்து வரலாம்.  

h5j2ur3 

அழகு பராமரிப்பு:

முருங்கைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.  உடலில் விக்கத்தை குறைத்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது.  இதனால் சருமம் பொலிவாகிறது.  



Listen to the latest songs, only on JioSaavn.com

முருங்கையிலை டீ தயாரிப்பது எப்படி?

முருங்கையிலை பொடி தற்போது மார்க்கெட்களிலும் கிடைக்கின்றன.  முருங்கைக்கீரையை நன்கு கழுவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி அருந்தலாம்.  அல்லது முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளலாம்.  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கையிலை பொடியை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் குடிக்கலாம்.  

Comments



உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement