தசைகளை வலுவாக்க இவற்றை சாப்பிடலாம்!!

தசைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இந்த பாதாம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

Edited by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: April 19, 2019 16:41 IST

Reddit
Muscle Power Likely To Increase Longevity: 3 Foods To Boost Muscle Health

உடலில் தசைகள் வலுவாக இருந்தால்தான் தினசரி வேலைகளில் முழு ஆற்றலுடன் ஈடுபட முடியும்.  தசைகள் வலுவாக இருக்க வேண்டுமென்றால், தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  கூடவே தசைகளை உறுதியாக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.  பொதுவாகவே 40 வயதை எட்டிவிட்டாலே தசைகள் வலுவிழக்க ஆரம்பித்துவிடும்.  ஆகவே தசைகளின் இறுக்கத்தை பராமரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

முட்டை:

முட்டையில் புரதம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  அத்துடன் தசைகளை அதிகரிக்க செய்து உறுதியாக செய்யும். 

60pcbbro

 இறைச்சி:

கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் புரதம் நிறைந்திருக்கிறது.  இந்த புரதம் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு தசை சிதைவுகளை சரிசெய்கிறது. 

பாதாம்:

பாதாமில் மக்னீஷியம், வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு உகந்த கொழுப்புகள் இருப்பதால் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.  தசைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இந்த பாதாம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com