நரம்பு, மூளை, இருதய ஆரோக்கியம் காக்க மஷ்ரூம் சாப்பிடலாம்!!

பொட்டாசியத்தின் அளவு அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 06, 2019 13:13 IST

Reddit
Mushroom Nutrition: Benefits Of Mushrooms And Interesting Ways To Add Them To Your Diet
Highlights
  • ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் மஷ்ரூமும் ஒன்று.
  • அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இதில் ஏராளமாக அடங்கியிருக்கிறது.
  • சூப், ஃப்ரை மற்றும் சாஸ் போன்றவற்றில் மஷ்ரூம் சேர்க்கலாம்.

உலகம் முழுவதும் காளான்களை பாஸ்தா, பீட்சா, பர்கர் மற்றும் ஆம்லெட் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டு வருகிறார்கள்.  இவற்றில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் ருசியினால் இதனை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு.  மிகவும் மென்மையாகவும் இறைச்சி போன்றும் இருக்கும் இந்த காளான்களை தினமும் கூட உணவில் சேர்த்து கொள்ளலாம்.  காளானில் கலோரிகள் மிகவும் குறைவு.  100 கிராம் காளானில் 22 கலோரிகளே உள்ளது.  இதில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு.  மேலும் புரதம், இரும்புச்சத்து, மக்னீஷியம், வைட்டமின் சி,டி, பி6, பொட்டாஷியம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.  உடல் எடை குறைக்க, இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க மற்றும் மூளையின் செயல் திறனை மேம்படுத்த காளான் சாப்பிடலாம்.  பொட்டாசியத்தின் அளவு அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.  மேலும் இதில் க்ரோமியம் இருப்பதால் இரத்த சர்க்கரையையும் சீராக வைக்கிறது.   காளானை எப்படி உணவில் சேர்த்து கொள்ளலாம் என்று பார்ப்போம். 

Newsbeepக்ரீமி சாஸ்:

சாஸ் மற்றும் க்ரேவியில் காளானை சேர்ப்பதால் அது க்ரீமியாக இருக்கும்.  இதனால் நீங்கள் க்ரேவியில் பால் மற்றும் க்ரீம் சேர்க்க தேவையில்லை.  நீங்கள் பாஸ்தா தயாரிக்கும்போது, க்ரீம் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு காளானை அரைத்து சேர்க்கலாம்.  rd16s36 

மஷ்ரூம் காபி:

காலையில் காபி குடிக்கும்போது நம்மில் சிலர் அதில் மஷ்ரூம் சப்ளிமெண்ட் அல்லது பௌடர்களை சேர்த்து குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அதேபோல நீங்கள் வீட்டிலேயே காளான்கலை காபியில் சேர்த்து குடிக்கலாம்.  5vp76im8 

மஷ்ரூம் சூப்:

காளான்களை வேகவைத்து சூப் செய்யலாம் அல்லது காய்கறிகள் வேகவைத்த நீரில் வேகவைத்த காளான் சேர்த்து சாப்பிடலாம்.  மஷ்ரூம் ஃப்ரை:

காளானில் புரதம் அதிகம் உள்ளதால் இத்துடன் ப்ரோக்கோலி, பீன்ஸ் மற்றும் குடை மிளகாய் சேர்த்து ஃப்ரை செய்து சாப்பிடலாம்.   

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement