இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் காளான்கள் எப்படி உதவுகின்றன?

தினசரி வெள்ளை காளான்கள் சாப்பிடுவதால், குடல் நாளத்தில் நுண்ணுயிர்கள் அதிகரிப்பதன் விளைவாக ப்ரீபயாடிக் (prebiotic) ஆக செயல்படுகிறது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 06, 2018 13:09 IST

Reddit
Mushrooms For Diabetes: Know How Mushrooms Help In Managing Blood Sugar Levels

Functional Foods எனும் இதழில் வெளியான ஒரு ஆய்வின் படி, தினசரி வெள்ளை காளான்கள் சாப்பிடுவதால், குடல் நாளத்தில் நுண்ணுயிர்கள் அதிகரிப்பதன் விளைவாக ப்ரீபயாடிக் (prebiotic) ஆக செயல்படுகிறது. அதன் மூலம், கல்லீரலில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்த முடியும் என இந்த ஆய்வின் முடிவு சொல்கிறது. இந்த ஆய்வில் எலிகளை வெள்ளை காளான் உண்ண வைத்ததன் மூலம், எலிகளின் குடலில் நுண்ணுயிர்கள் மற்றும் மைக்ரோபோட்டாகளின் கலவை மாறியது. மேலும், அது பல சின்ன சின்ன கொழுப்பு அமிலங்களை உருவாக்கியது. குளுக்கோஸ் உற்பத்தியை நிர்வகிப்பதற்கு தேவையான மரபணுக்களின் வெளிப்பாட்டை சிக்னினேட் மற்றும் ப்ரோபினோட் எனும் கொழுப்பு அமிலங்கள் மூலம் நிர்வகிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இந்த ஆய்வில் மைக்ரோபோட்டாக்களை கொண்ட காளான்கள் மற்றும் நுண்கிருமிகள் ஏதும் இல்லாத காளான்கள் என இரண்டு வகையான காளான்கள் என எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்த காளான்களை உண்டதன் மூலம்,  எலிகளின் குடல் நாளத்தில் உள்ள நுண்கிருமிகள் ஒரு அமில மாற்றத்தை ஏற்படுத்துவதன் வாயிலாக உடலில் உள்ள குளுகோஸ் உற்பத்தியை கட்டுப்படுத்த முடிகிறது.

நம் உடலில் உள்ள சில நல்ல நுண்கிருமிகளுக்கு உணவூட்டி ஜீரண மண்டலத்துக்குள் அனுப்பிடும் ப்ரீபயாடிக் (prebiotic) ஆக, இங்கே காளான்கள் செயல்படுகிறது.

வேர்களோ, இலைகளோ, பூக்களோ அல்லது விதைகளோ எதுவும் இல்லாத காளான் ஒரு பூஞ்சை (Fungi); காய்கறி அல்ல. தினமும் காளானை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், பல நன்மைகள் உண்டு. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமில்லாமல், நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய குறைந்த கலோரி ஊட்டச்சத்துக்களை அதிகளவில் கொண்ட  ஆரோக்கியமான உணவும் கூட. 

காளானின் மருத்துவ குணங்கள்:

1. நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களின் மூலம் அதிகரிக்கக்கூடிய வீக்கங்களை கட்டுப்படுத்த உதவும் அழற்சி-எதிர்ப்பு சக்திகள் காளானில் உள்ளது.  

2. குறைவான கிளைசெமிக் அளவை கொண்டுள்ளதால், காளான்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சரியான சிற்றுண்டியாக இருக்கும். கார்போஹைட்ரேட் சக்தியும் குறைவான அளவில் மட்டுமே இருப்பதால், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை அதிகரிக்காது. 

3. ஃபிரெஷ் ஆன காளான்கள், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் பெரிதும் உதவும். காளான் குறைந்த அளவில் கலோரிகளையும், அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்தையும் கொண்டது என்பதால், நாள் முழுக்க உங்களை சோர்வில்லாமல் இருக்க செய்யும்.  

4. ஃபிரெஷ் ஆன காளான்கள், கரையக்கூடிய மற்றும் எளிதில் கரையாத ஃபைபரை அதிக அளவில் கொண்டிருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

சர்க்கரை நோய்க்கு காe3w2ளானை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

பின்வரும் காளான் உணவு வகைகளை, உங்கள் தினசரி உணவில் சேர்த்து பயன்பெறலாம்:  

1. காளான் ஊத்தாப்பம்
2. வேகவைத்த காளான் மற்றும் கீரை
3. காளான் சூப் 
4. சூடான காளான் சாலட்
5. சில்லி காளான் 

உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக் கொள்வதற்கு முன்பு, உங்கள் உடல்நலனைப் பொறுத்து மருத்துவரிடமும் ஆலோசித்துக் கொள்ளுங்கள்! 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement