வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உங்கள் நகங்களை அழகாக்குங்கள்!

நகங்கள் மெல்லியதாகவும், உடனே உடைந்து போகும்படியாக இருந்தால் வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகளைக் குறிக்கும். 

   |  Updated: March 31, 2019 12:01 IST

Reddit
Nail Care: Say Bye-Bye To Brittle And Chipped Nails With These Easy Home Remedies

ஆசை ஆசையாக வளர்த்த நகங்கள் உடைந்து போகிறதா? ஆம் என்றால் உங்கள் நகங்களை பாதுகாக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவில் பல மக்கள் நகங்களை பாதுகாக்க மெனிக்யூர் அல்லது பெடிக்யூர் செய்து கொள்கிறார்கள். இதற்காக தனியாக பியூட்டி பார்லர் சென்று செலவும் செய்கிறார்கள். நகங்களைப் பாதுகாப்பது நிச்சயம் கை  மற்றும் கால்களின் ஆரோக்கியத்தைத் தரும். நகங்களே உங்கள் ஆரோக்கியத்தை சொல்லும். வெளிர்ந்த நகங்கள் இரத்த சோகையை அல்லது வறட்சியைக் குறிக்கும். நீல நிற நகங்கள் உடலுக்கு போதிய ஆக்ஸிஜன் இல்லாததைக் குறிக்கும், நகங்கள் மெல்லியதாகவும், உடனே உடைந்து போகும்படியாக இருந்தால் வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகளைக் குறிக்கும். 

Newsbeep
vsq2eu9g

 

நகங்களுக்காக ஏதேனும் தனி உணவுகள் இருக்கிறதா என்ற கேள்வி எழலாம். கால்சியம், ஜெலெட்டின், வைட்டமின் B தான் உங்கள் நகப் பிரச்னைக்கு தீர்வு. உடைந்த நகங்களால் வலியைத் தாங்க முடியாமல் தவித்து இருப்போம். நகங்களை வெட்டும்போது பார்த்து பத்திரமாக வெட்டுங்கள். பிறகு லேவிஷ்லி க்ரீம் வைத்து லேசாக மசாஜ் செய்யுங்கள்.  உங்கள் நகங்களின் பாதுகாப்புக்கு உங்கள் அன்றாட உணவில், சிக்கன், மீன் சேர்த்துக் கொள்ளுங்கள். சைவப் பிரியர்கள், பசலைக்கீரை, ப்ரொக்கோலி, கேல் மற்றும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உணவுகளை சாப்பிடலாம். ப்ளு பெர்ரிஸ், ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சை, வாழைப்பழங்கள் கூட நகங்களுக்கு நல்லது. 

தக்காளி, ஸ்வீட் பொட்டேட்டோஸ், கேரட், பெல் பெப்பர்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நகங்களுக்கு உறுதியையும் பாதுகாப்பையும் தரும்.  இதனுடன் நட்ஸ்,  பாதாம், வால்நட், சன்ஃபிளவர் சீட்ஸும் சாப்பிட்டு வரலாம். இவற்றில் வைட்டமின் இ, மக்னீசியம் மற்றும் மாங்கனீசு, காப்பர் உள்ளது. மேலும் நகத்துக்கு ஊட்டம் தரும் பால், முட்டை, தானியங்கள், லென்டில்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

நகங்களில், கீழ்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் உடல்நலனைப் பாதுகாக்கும் நேரம் இது.1)  நகங்களில் செங்குத்தாக, வரிவரியாக கோடுகள் போன்று இருந்தால், உங்களுக்கு செரிமான இயக்க குறைபாடு, மினரல்,  புரோட்டீன், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து  குறைபாடு இருப்பதைக் குறிக்கும்.

2) நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், கால்சியம் குறைபாடு இருப்பதைக் குறிக்கும். அதிக அளவு இனிப்பு மற்றும் ரீஃபைண்டு சர்க்கரையின் பாதிப்பு  உடலில் இருந்தாலும் அதை சுட்டிக்காட்டும்.

3) உடைந்த நகங்கள் (Bitten nails) நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் மினரல் குறைபாட்டைக் குறிக்கும்,

4) ஹேங் - தோலுரிந்த நகங்கள் புரதம், வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட், நியூட்ரிஷியன் குறைபாட்டைக் குறிக்கும்.

5) பிரிட்டில் நகங்கள் (Brittle nails) இரும்புச்சத்து, வைட்டமின் ஏ குறைபாட்டையும்,  தைராய்டு, கிட்னி சம்பந்தமான பிரச்னைகளைக் குறிக்கும். 

6) ரெட்டிஷ், பர்ப்பிள் நகங்கள் உடல் சோர்வைக் குறிக்கும்.

7) டார்க் ரெட் நகங்கள் உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவால் வரும் ரத்த பாதிப்பை குறிக்கும்.

8) வெளிர் நகங்கள் ரத்த ஓட்டம் சீராக இல்லாததையும், இரத்த சோகை, கல்லீரல் மற்றும் கிட்னி ஆரோக்கியத்தைக் குறிக்கும்.ஆனால், இயற்கை முறையில் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் உங்களின் நகம் சார்ந்த அனைத்து விதமான பிரச்னைகளையும் சரிசெய்யலாம்.மேல்தோலை மிருதுவாக்க...

தேவையானவை : 

2 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் பைனாப்பிள் ஜூஸ்

2 டேபிள் ஸ்;பூன் பப்பாளி

1 முட்டை மஞ்சள் கரு

1 டேபிள் ஸ்பூன் சிடர் வினிகர்செய்முறை:

பப்பாளியை நசுக்கி அதனுடன் பைனாப்பிள் ஜூஸை சேர்த்துக் கொள்ளுங்கள். முட்டையைத் தனியாக அடித்து அதில் அந்த சிடர் வினிகரை சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதில் நகங்களை அரைமணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு மசாஜ் செய்யுங்கள். பழங்களில் நிறைந்துள்ள என்ஸைம்கள் நகங்களின் தோல்களுக்கு சாஃப்ட்னெஸ் தந்து பாதுகாக்கும்.உடையும் நகங்களுக்கான க்ரீம்...

தேவையானவை:

அரை கப் தேன்

1 முட்டை மஞ்சள் கரு

அரை கப் விளக்கெண்ணெய் 

1 டேபிள் ஸ்பூன் ஸீ சால்ட்செய்முறை: அனைத்து பொருட்களையும் அரைத்து காற்றுப் புகாத ஜாரில் அடைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். தினமும் அரைமணி நேரம் அல்லது இரவு முழுவதும் தடவி வந்தால் நகம் உடைதல் நின்றுவிடும். நக வெடிப்புக்கு இந்த முறைகளைப் பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

- வாரத்துக்கு மூன்று முறை கொஞ்சம் சூடான ஆலிவ் ஆயிலில் மசாஜ் செய்ய வேண்டும்.

- எலுமிச்சை சாறு எடுத்த பிறகு தோலை தூக்கி எறியாதீர்கள். அந்தத் தோலைக் கொண்டு நகங்களில் தேய்த்து வாருங்கள். 

Listen to the latest songs, only on JioSaavn.com

- 2 டேபிள் ஸ்பூன் வோட்காவுடம் 1 டேபில் ஸ்பூன் லெமன் ஜூஸ் கலந்து நகங்களில் தேய்த்து வாருங்கள்.

மேற்கண்ட இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நகங்களைப் பாதுகாத்திடுங்கள்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement