காதலர் தினம் ஸ்பெஷல் : பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரை வீட்டிலே செய்யலாம்

உங்களின் கை மற்றும் காலின் அழகை பாரமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Suparna Trikha  |  Updated: February 08, 2019 17:12 IST

Reddit
Natural DIY Pedicure And Manicure For Valentine's Day

காதலர் தினத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா…? என்ன ட் ரெஸ் போடனும் எந்த இடத்துக்கு போகனும் என்பது போன்ற எல்லா ப்ளானும் போட்டிருப்பீங்க. நீங்கள் அழகாகவும் தன்னம்பிக்கையுடன் செல்ல நிச்சயமாக உங்களின் கை மற்றும் காலின் அழகை பாரமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து கொள்ளும் போது தன்னம்பிக்கை உருவாகுவதோடு, உங்களின் கை, கால்களுக்கு சிறப்பான முறையில் மசாஜ்ஜும் கிடைக்கிறது. இதை பார்லரில் தான் செய்ய வேண்டும் என்றில்லாமல் வீட்டிலிலும் செய்து கொள்ளலாம். 

மெனிக்யூர் காதலர் தினத்தில் உங்களின் தோற்றத்தில் கூடுதல் அழகை சேர்க்கும்.

தேவையானபொருட்கள்

அரை கப் அரைத்து வைத்த ரோஜா இதழ் பேஸ்ட் 

அரைக் கப் ரோஜா இதழ் 

1 லிட்டர் வெதுவெதுப்பான கொழுப்பு நிறைந்த பால்

 2 பிளாஸ்டிக் அல்லது செராமிக் பவுல் 

4 டே.ஸ்பூன் சுகர் 

2 லெமன் வெட்டியது

2 டே.ஸ்பூன் வாசனை எண்ணெய்

4 டே.ஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம்

2 டே.ஸ்பூன் சந்தன பவுடர்

துண்டு 

லிக்யூட் சோப்

1 நெய்ல் பிரஷ்

1 நெயில் ஃபைல் 

ப்யூமிஸ்ஸ்டோன் (pumice stone)

மெனிக்யூர் செய்யும் முறை நகத்தில் ஃப்ரஷ் க்ரீம்மை வைக்கவும். 

பின் பவுலில் வெதுவெதுப்பான பாலில் வாசனை எண்ணெய்யை ஊற்றி ரோஜா இதழ்களை போட்டு அதில் ஊறவைக்கவும். 

5 நிமிடங்கள் ஊறவைத்து டெட் ஸ்கின்னை நீக்க நன்றாக தேய்க்கவும். 

கை மற்றும் நகத்தில் உள்ள அழுக்கை நீக்கவும். 

கூடுதலாக சோப்பை எடுத்து ப்யூமிஸ் ஸ்டோனை வைத்து கை மற்றும் முழங்கை வரை நன்றாக தேய்த்து அழுக்கை நீக்கவும்.  

லெமனை சுகரில் தொட்டு கைகளில் நன்றாக ஸ்க்ரப் செய்து தேய்க்கவும். 

ரோஜா பூ பேஸ்டில் சந்தன பவுடரைக் கலந்து மாஸ்க் போல் போட்டு 15 நிமிடம் கைகளை ஊறவைக்கவும். 

வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துண்டில் துடைக்கவும். 

1gvil0n8

 

பெடிக்யூர் 

வீட்டிலே பெடிக்யூர் செய்யலாம். 

தேவையானபொருட்கள் 

1 பிளாஸ்டிக் டப் 

100 கிராம் உப்பு

ஜாஸ்மின் எஸ்ஸன்சியல் ஆயில்

ஜாஸ்மின் ஃப்ளவர்ஸ்

ஜாஸ்மின் மஸாஜ் ஆயில்

2 ஆரஞ்ச் வெட்டியது 

2 டே.ஸ்பூன் ஓட்மீல் 

வெதுவெதுப்பான தண்ணீர்

நெயில் ஃபைல்

ப்யூமிஸ் ஸ்டோன்

நெயில் பிரஷ்

துண்டுகள் 

செய்யும்விதம் 

பாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் அதில் உள்ள டெட் ஸ்கின்னை நீக்குவது சற்று சிரமமாக இருக்கலாம். 

டப்பில் வெதுவெதுப்பான நீரில் 2 டே.ஸ்பூன் மசாஜ் ஆயிலை ஊற்றி, ஆரஞ்சு துண்டுகளை போட்டு பாதத்தை டப்பில் ஊறவைக்கவும். 

நெயில் பிரஷ் மற்றும் ஸ்டோனை வைத்து நன்றாக தேய்த்துக் கழுவவும். 

பின் தண்ணீரில் உப்பு மற்றும் மசாஜ் ஆயில் எஸ்ஸன்சியல் ஆயிலை ஊற்றி மீண்டும் சிறிதுநேரம் ஊறவைக்கவும். 

பின்னர் பாதத்தை சுத்தமான தண்ணீரில்  கழுவவும். 

ஓட்மீலை பேஸ்டு போல் கரைத்து பாதத்தில் மாஸ்க் போல் போட்டு 7நிமிடத்திற்கு பின் கழுவவும். ஓட்மீல் உங்களின் சருமத்தை மிருதுவாக்கி அழகாக மாற்றும். 

 lg4r9f6g

இதை வீட்டில் செய்து பாருங்கள் அழகான பாதம் மற்றும் மிருதுவான கைகளை பெறுங்கள்


 

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement