அடர்த்தியான கூந்தலுக்கு உருளைக்கிழங்கு சாறு !

இயற்கை பூக்கள், காய்கறிகள் கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்

   |  Updated: December 11, 2018 18:27 IST

Reddit
Haircare Tips: Use Potato Juice To Grow Long And Lustrous Locks

ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், தண்ணீர், இரசாயணம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் உடைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயணங்களையும் பயன்படுத்த வேண்டாம். இயற்கை பூக்கள், காய்கறிகள் கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு

1. உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு.
2. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
3. உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும்.
4. கூந்தலில் அதிகபடியான எண்ணெய் இருந்தாலும் கூந்தல் உடையும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.
5. ஸ்கால்ப் வறண்டு போனால் பொடுகு தொந்தரவு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி குறைந்துவிடும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும்.
6. முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.

Newsbeep
q6eissug

உருளைக்கிழங்கு சாற்றை எப்படி பயன்படுத்துவது?

உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்காப்பில் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்தால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும். கூந்தலில் தடவி ஊறியபின் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். மாதம் மூன்று முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

எப்படி தயாரிப்பது?

உருளைக்கிழங்கை நன்கு கழுவி கொள்ளவும்.
அதன் தோலை நீக்கி துருவி கொள்ளவும்.
துருவிய உருளைக்கிழங்கை கையால் நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு மெல்லிசான துணியால் அரைத்து வைத்தவற்றை வடிகட்டி சாறு எடுத்து ஸ்கால்பில் தடவி கொள்ளவும். தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement