தலைமுடி பிரச்சனைகளை நீக்கும் அற்புத மருந்து வேப்பம்

வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், ஆகியவை காய்ச்சல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தலாம்

Sushmita Sengupta  |  Updated: June 04, 2018 12:48 IST

Reddit
Neem For Hair: How To Use The Ayurvedic Wonder For All Your Hair Woes
Highlights
  • இந்தியாவில் அதிக வேப்ப மரங்கள் உள்ளது
  • வேப்ப மரம் அதிக மருத்துவ குணம் நிறைந்தது
  • தலைமுடிப் பிரச்சனைகளின் சிகிச்சைக்கு வேப்பம் பயன்படும்
இந்தியாவில் அதிக மருத்துவ குணம் நிறைந்த மரங்கள், செடி கொடிகள் உள்ளன. வீட்டிற்கு அருகிலேயே எளிதாகக் கிடைக்கக் கூடிய மருத்துவ குணம் கொண்ட செடி மரங்களை வளர்க்கலாம். அப்படியாக, எளிதாகவும் அதிகம் காணப்படும் வேப்ப மரத்தின் மருத்துவ குணங்கள் ஏராளம்.

30 முதல் 50 அடி நீலம் உடைய வேப்ப மரங்கள், மருத்துவ குணங்கள் கொண்டவை. `இயற்கை மூலிகை சிகிச்சைகள்' என்ற புத்தகத்தின் எழுத்தாளர் மருத்துவர் பட்கே கூறுவதாவது, "வேப்ப எண்ணெய் பொடுகுப் பிரச்சனையை குணப்படுத்தும். அந்தக் காலத்தில், வேப்பங் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தினர். வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், ஆகியவை காய்ச்சல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தலாம். மேலும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. ஆயூர்வேதத்தின்படி, வேப்பம், சீகைக்காய், நெல்லி, ஆகியவை தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க கூடியவை.
 
neem

முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை:தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேப்பத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேப்பம் பயன்படும்.

செய்ய வேண்டியவை

வேப்ப எண்ணெய்யை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

 
hair mask
 
பொடுகுப் பிரச்சனை

மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.

செய்ய வேண்டியவை

வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும். 
 
neem benefits

பேன் பிரச்சனை

பெடிகுலோசிஸ் காப்பிடிஸ் என அழைக்கப்படும் பேன், மனித தலைமுடிகளில் எளிதாக ஊடுறுவக் கூடியவை. பேன் தொல்லையில் இருந்து விடுபெற வேப்ப எண்ணெய் பெரிதும் உதவியாய் இருக்கும். வேப்ப எண்ணெயில் இருக்கும் அசாடிராக்டின் எனப்படும் மூலப்பொருள் பூச்சிகளை நீக்கும் குணம் கொண்டவை.

செய்ய வேண்டியவை

Commentsவேப்ப எண்ணெய்யை தலையில் தேய்த்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இந்தியா மட்டும் இன்றி, உலகில் பல்வேறு நாடுகளில் வேப்ப மரத்தின் பயன்களை தெரிந்து வருகின்றன. எனவே, வேப்பத்தின் ஆரோக்கியத்தை பெற்று பயனடையவும்.
 
hair wash 650


About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement