மைதாவிற்கு மாற்றாக ஆரோக்கியமான நூடுல்ஸ் வகைகள்

நூடுல்ஸை விரும்புகிறவர்கள் அவர்களின் விருப்பத்தை விட்டுக் கொடுக்காமல் அதே நேரத்தில் ஆரோக்கியமான நூடுல்ஸை சாப்பிட சில உணவுப் பொருட்கள்

  | Translated by: Saroja  |  Updated: March 23, 2019 12:27 IST

Reddit
Noodles Lovers, Try These Healthy Alternatives To Maida Noodles

திணையரிசி நூடுல்ஸ் நார்ச்சத்து நிறைந்தது

Highlights
  • நூடுல்ஸ் மைதாவினால் செய்யப்படுகிறது.
  • மாவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் பிரஸசஸ் செய்து நீக்கப்படுகிறது
  • சுக்கினியை நூடுல்ஸ் போல் நீளமாகத் துருவினால் உண்மையான நூடுல்ஸ் போல் வரும

நூடுல்ஸ் பிரபலமான சீன உணவாகும். இந்திய உணவகங்களில் மக்களினால் விரும்ப்பட்டும் உணவுகளில் ஒன்று. அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவாக இல்லாமல் எப்போதாவது சாப்பிட  விரும்புகிற உணவாகவே நூடுல்ஸ் இருந்து வருகிறது. தெருவோர உணவுகளில் மூளை முடுக்கெங்கும் கிடைக்கும் உணவாக நூடுல்ஸ் மாறியுள்ளது. நூடுல்ஸ் இருக்கும் சுவையில் அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் உடல் நலக்கூறுகள் எதுவும் தெரிவதில்லை. நூடுல்ஸ் ஒரு சுவையான அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் உணவாகும். 

உண்மையில் நூடுல்ஸ் மைதாவினால் செய்யப்படுகிறது. மைதாவில் செய்யப்படும் பொருட்களை அதிகளவில் உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மாவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் பிரஸசஸ் செய்து நீக்கி விடுவதால் இதை சாப்பிடுவதால் உடலுக்கு ஊட்டச்சத்து என்று எதுவும் இல்லை. நூடுல்ஸை விரும்புகிறவர்கள் பலரும் இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வது இல்லை. நூடுல்ஸை விரும்புகிறவர்கள் அவர்களின் விருப்பத்தை விட்டுக் கொடுக்காமல் அதே நேரத்தில் ஆரோக்கியமான நூடுல்ஸை சாப்பிட சில உணவுப் பொருட்களை பார்க்கலாமா… 

மைதா நூடுல்ஸ்க்கு பதிலாக ஆரோக்கியமான நூடுல்ஸ் சில

திணையரிசி நூடுல்ஸ்

utqu4fgo

குளுட்டன் இல்லாத மாவுகளில் ஒன்று. நார்ச்சத்து அதிகமுள்ள நூடுல்ஸ் வகைகளில் ஒன்று. அமினோ ஆசிட்ஸ், மக்னீசியம், விட்டமின்ஸ், இரும்புச்சத்து,பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஆண்டியாக்சிடன்ஸ் நிறைந்தது. திணை மாவு கிடைக்கிறது. மைதாமாவில் செய்வது போன்றே இதிலும் நூடுல்ஸ் செய்யலாம்.

கம்பு நூடுல்ஸ்

afcjugp8

கம்பு மாவில் செய்யப்படும் நூடுல்ஸ் சீக்கிரமே பசியைத் தீர்த்து வயிறு நிறைத்துக் கொடுக்கும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளது, குளுட்டன் இல்லாத தானியமாகும். கம்பில் அமினோ ஆசிட்ஸ் மற்றும் ஆண்டியாக்சிடன்ஸ் நிறைந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை பாதுகாக்கிறது. மைதாவிற்கு பதிலாக கம்பு மாவினை பயன்படுத்தலாம்.

சுக்கினி நூடுஸ்

f8347q4g

சுக்கினியை நூடுல்ஸ் போல் நீளமாகத் துருவினால் உண்மையான  நூடுல்ஸ் போல் வரும். சுவையான இந்த நூடுல்ஸ் குளுட்டன் இல்லாதது. செரிமானத்திற்கு மிகவும் ஏற்றது. உடல் எடைக் குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதை உணவாக சாப்பிடலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.comDisclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement