Onam 2020: கேரள ஸ்பெஷல் டேஸ்டியான பருப்பு கறி..வீட்டிலேயே செய்யலாம்!

ஓனம் பண்டிகையில், கேரளாவின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு கறியை செய்வது குறித்து இங்கு பார்க்கலாம். 

  |  Updated: August 25, 2020 12:42 IST

Reddit
Onam 2020: How To Make Kerala-Style <i>Parippu Curry</i> (Dal) For Onam Sadya

ஒனம் ஸ்பெஷல் பருப்பு கறி

Highlights
  • ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரையில் ஓனம் கொண்டாடப்படுகிறது
  • இது கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது
  • பருப்பு கறி கூட்டு கேரளாவில் ஸ்பெஷல் ரெசிபி ஆகும்

கேரளாவில் பிரசத்திப் பெற்ற பண்டிகையான ஓனம் (திருவோணம்) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆவணி கொண்டாடப்படும் இந்த ஓனம் பண்டிகையில் அனைவரின் வீட்டிலும் அத்தப்பூ கோலம் போடப்படும். இனிப்பு பலகாரங்கள், விருந்து விசேஷங்கள் நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டும் கொரோனா காலத்திலும் வீடுகளுக்குள்ளேயே மக்கள் ஓனம் பண்டிகைய கொண்டாடுகின்றனர்.

இத்தகைய ஓனம் பண்டிகையில், கேரளாவின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு கறியை செய்வது குறித்து இங்கு பார்க்கலாம். 



onam sadhya 650

தேவையான பொருட்கள்:

பருப்பு - அரை கப்
மஞ்சள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - பருப்பு கொதிக்க வைக்கும் அளவு

தேங்காய் கறி பேஸ்ட்
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
கடுகு - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - சிறிதளவு

தாளிக்க:
தேங்காய் எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 8
மிளகாய் வத்தல் - 2
ஆனியன்  - 2 டேபிஸ் ஸ்பூன்

செய்முறை:

படி 1. முதலில் பருப்பை சுத்தம் செய்து, குக்கரில் போட வேண்டும். அத்துடன் மஞ்சள், உப்பு போட்டு 5 விசில் அடிக்கும் வரையில் காத்திருக்கவும்.

படி2. பின்பு பருப்பை நன்கு கிடைந்து, நல்ல பேஸ்ட் ஆகும் வரையில் கிண்டவும். 

படி3. தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும் 

படி 4: இப்போது பருப்பு, தேங்காய் பேஸ்ட்டை ஒரு கடாயில் தாளித்து எடுக்கவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

படி 5.  மிதமான சூட்டில் வைத்திருந்து, நெய் சேர்த்து சிறிது கொதிக்க வைத்தால் போதும். பருப்பு கறி ரெடி



Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement