கிரிஸ்பி மசாலா டோஸ்ட் செய்வது எப்படி??

ஐந்தே நிமிடத்தில் பட்டர் டோஸ்டு பிரட் எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.   

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 22, 2019 19:53 IST

Reddit
Indian Cooking Tips: Pair Your Evening Cuppa With This Crispy Masala Toast
Highlights
  • பட்டர் தடவிய பிரட்டை சுவையாக செய்து சாப்பிடலாம்.
  • சாட் மசாலா சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
  • மிகவும் எளிமையாக இதனை தயார் செய்யலாம்.

பொதுவாக எல்லோருக்குமே மாலை நேரத்தில் பசி ஏற்படுவது சகஜம்தான்.  அந்நேரத்தில் சூடான தேநீர் அல்லது காபியுடன் சமோசா, பஜ்ஜி, பக்கோடா, ஸ்ப்ரிங் ரோல் போன்றவற்றை சாப்பிடுவோம்.  இதற்கு பதிலாக வீட்டிலேயே பிரட் டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.  ஐந்தே நிமிடத்தில் பட்டர் டோஸ்டு பிரட் எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம். 

feh0dshgதேவையானவை:

பிரட் ஸ்லைஸ் – 2

ஒரேகனோ – 2 மேஜைக்கரண்டி

சாட் மசாலா – 1 மேஜைக்கரண்டி

சீஸ் – ½ கப்

பட்டர் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

பிரட்டை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.  அதில் ஒருபக்கம் மட்டும் பட்டர் தடவி கொள்ளவும். 

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அதில் தவாவை வைத்து, பட்டர் தடவிய பிரட்டை தவாவில் வைக்கவும்.  லேசாக பொன்னிறமாக வரும்போது அதன் மறுபக்கத்தில் சீஸ் ஸ்ப்ரெட்டை தடவி அதன் மேல் ஒரேகனோ மற்றும் சாட் மசாலா தூவவும். 

சில நிமிடங்கள் கழித்து, பிரட்டை இரண்டு பக்கமும் நன்கு டோஸ்ட் செய்து மேலும் சீஸ் தடவி மொருமொருப்பாக வரும்வரை வைத்திருந்து பின் எடுக்கவும்.  துரித உணவுகளுக்கு பதிலாக இவற்றை சாப்பிடலாம்.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com