பள்ளிபாளையம் கோழி பிரியாணி ரெசிபி

இன்று நாம் பகிரும் ரெசிபி "பள்ளிபாளையம் கோழி பிரியாணி" 

NDTV Food  |  Updated: June 04, 2018 12:53 IST

Reddit
Pallipaalayam Chicken Briyani
பிரியாணி என்றால்  யாருக்கு தான் பிடிக்காது , அதிலும் ஒவ்வொரு ஊருக்கும் அந்த பாரம்பரியத்திற்கு ஏற்ற தனி சுவையுண்டு. அந்த வகையில் இன்று நாம் பகிரும் ரெசிபி "பள்ளிபாளையம் கோழி பிரியாணி" 

பாஸ்மதி அரிசி - 1 கப்
கோழி -   3-4 துண்டுகள்
தேங்காய் பால் - 2 கப்
கசக்கசா -  1 தேக்கரண்டி
நறுக்கிய மிளகாய் - 3 
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1 
புதினா இலைகள் - 1 கொத்து 
பெருஞ்சீரகம் -  2 கரண்டி
இலவங்கபத்திரி (இலை) - 2
கிராம்பு - 5
பட்டை - 1 
நசுக்கிய ஏலக்காய் - 3
நெய்  - 1/4 கப்

செய்யும்முறை 

அடுப்பை குக்கரில் வைத்து எண்ணெய் ஊற்றவும் மிளகாய் உடன் மற்ற மசாலாக்களையும் எண்ணெய்யில் சேர்க்கவும் 

மனம் வரும்வரை நன்று வறுக்கவும் 

வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, புதினா மற்றும் கோழி சேர்க்கவும்.

சில நிமிடங்கள் நன்கு வறுக்கவும்  

பின்னர் கசகசா தூளை  சேர்க்கவும், அத்துடன் உப்பு மற்றும் அரிசி சேர்த்து கலக்கவும். 

அதன் பின் 2 கப் தேங்காய் பால் சேர்த்த்து, குக்க்கரை மூடி, அடுப்பை சிம்மில் வைத்து அரிசி வேகும் வரை சமைக்கவும். 

பள்ளிபாளையம் கோழி பிரியாணி தயார் 

Listen to the latest songs, only on JioSaavn.com

ரெசிபி வழங்கியது: தீன தியாளன், செஃப், ரெஸிடென்ஸி டவர் Comments
 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement