சருமம் மினுமினுக்க வேண்டுமா? பப்பாளி ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!!

இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 03, 2019 17:22 IST

Reddit
3 Papaya Face Packs For Dry, Oily And Normal Skin
Highlights
  • பப்பாளியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
  • இதில் வைட்டமின் மற்றும் மினரல் அதிகம் இருக்கிறது.
  • இதில் பொட்டாசியம் இருப்பதால் சருத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

எல்லோருக்குமே மாசுமருவற்ற சருமத்தின் மீது பேராசை இருக்கும்.  அழகு என்ற விஷயத்தில் மட்டும் ஆண், பெண் என்ற பேதமே இல்லை.  தற்போதைய சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக சருமம் மிக சீக்கிரமே பொலிவிழந்து விடுகிறது.  சருமம் அதன் மென்மை தன்மையையும், ஈரப்பதத்தையும், அழகையும் இழந்து போவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.  அதன் விளைவாகதான் தெருவிற்கு நான்கு ப்யூட்டி பார்லர்கள் உருவாகியிருக்கிறது.  பார்லருக்கு செல்ல விருப்பமில்லாதவர்களுக்காகவே இந்த ப்யூட்டி டிப்ஸ். 

papaya face pack

 உங்கள் சருமம் வறட்சியாகவோ அல்லது அதிகபடியான எண்ணெய் தன்மையுடனோ இருக்கலாம்.  கவலை வேண்டாம்.  உங்களுக்காகவே இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் பப்பாளி.  பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது.  மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள். 

பப்பாளி மற்றும் தேன்:

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி மற்றும் தேன் சிறந்த தீர்வு.  தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும்.  பப்பாளியின் விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது. பப்பாளியின் விழுது – ¼ கப்

தேன் – ½ தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டிஇவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்.  10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.  வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

orange face pack

 

பப்பாளி மற்றும் ஆரஞ்சு:

பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும்.  மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது. பப்பாளி விழுது – தேவையான அளவு

ஆரஞ்சு சாறு – 3 தேக்கரண்டிஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.  இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.  இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும். papaya

 

பப்பாளி, வாழைப்பழம் மற்றும் வெள்ளரி:

உங்கள் சருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.  சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைக்க உதவும்.  பப்பாளி, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.  இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10-12 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும்.  இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது. Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement