தென்னிந்திய விருந்துகளில் தவறாமல் இடம் பெறும் பாயாசம்...! சுவையான பாயாசம் செய்முறை இதோ

பாயாசத்தை முன்கூட்டியே சொல்லி வைத்து வாங்கி சாப்பிடுவதை பார்க்கலாம்.

Translated by: Saroja  |  Updated: March 16, 2019 13:03 IST

Reddit
Payasam - The Best Way To End A Traditional South Indian Meal
Highlights
  • பாயாசத்தை வாழை இலையில் பறிமாறுவது வழக்கம்.
  • திருமணங்களில் இரண்டு வகையான பாயாசம் பரிமாறப்படுகிறது.
  • தென்னிந்தியாவில் அனைத்து இடங்களிலும் பால் பாயாசம் பரிமாறப்படும்.

பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளில் பாயாசத்திற்கு ஓர் இடமுண்டு. தலை வாழை இலை போட்டு விருந்து வைக்கும் போது நிச்சயமாக பாயாசம் இல்லாமல் விருந்து முழுமையடைவதில்லை. தென்னிந்தியாவின் பாயாசத்தை வட இந்திய மாநிலங்களில் ‘கீர்' என்று அழைப்பதுண்டு. நூற்றாண்டுகளாக பாயாசத்தை வாழை இலையில் பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்றும் பல வீடுகளில் தயிர் சாதத்திற்கு முன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

கடந்த இருபது வருடங்களில் திருமண விருந்தில்  இரண்டு பாயாசங்களை பரிமாறுகின்றனர். பாயாசத்திற்கு முன்கூட்டியே சொல்லி வைத்து வாங்கி சாப்பிடுவதை பார்க்கலாம்.  குறிப்பாக கேரளா மாநில திருமணங்களில் பால் அட பாயாசம் பெரிய அளவில் செய்து பறிமாறுவதை பார்க்கலாம். விறகு அடுப்பில் செய்யப்படும் போது பால் நிறமாறும் அளவிற்கு சமைப்பது வழக்கம். தென்னிந்தியா சமையல் வகைகளில் மிகவும் சுவையான சில பாயாச வகைகளைப் பார்க்கலாம். சில பாயாசங்கள் பாலை அடிப்படையாக வைத்தும், சில பாயாசங்கள் பருப்பு வகைகளை அடிப்படையாக வைத்து செய்வதைப் பார்க்கலாம். 

rav746so

சுவைத்துப் பார்க்க வேண்டிய சில பாயாச வகைகள் 

பால் பாயாசம்: தென்னிந்தியா மூலை முடுக்கெல்லாம் பரிமாறப்படும் பாயசங்களில் இதுவும் ஒன்று. எளிமையான அரிசி பாயாசம் வீட்டில் முக்கிய நிகழ்வுகளில் செய்வது வழக்கம். மூன்று பொருட்களுடன் மிகவும் எளிமையாக செய்ய முடிகிற உணவு இது. அரிசி, பால் மற்றும் சர்க்கரை இவை இருந்தாலே இதை செய்து விடலாம். இதில் முந்திரி மற்றும் உலர் திரட்சைகளை சிலர் சேர்ப்பதைப் பார்க்கலாம். சிலர் சிவப்பரிசியில் செய்வதை பார்க்கலாம்.

 சேமியா பாயாசம் பால் பாயாசம் போன்றுதான் இதுவும். அரிசிக்குப் பதிலாக சேமியாவைப் பயன்படுத்துவார்கள். திக்கான இந்த பாயாசத்தை பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த இனிப்பாகவும் பறிமாறலாம். 

ஜவ்வரிசி பாயாசம் : மகாராஸ்ட் ரிய மக்கள் தங்கள் தங்கள் உணவுகளில் ஜவ்வரிசியை அதிகம் பயன்படுத்துவதை பார்க்கலாம். பால் பாயாசத்தில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி பயன்படுத்துவார்கள். 

பூரி பாயாசம் : பூரி பாயாசம் பலரின் குழந்தை பருவத்தை நினைவில் கொண்டுவரக்கூடிய பாயாசங்களில்  ஒன்று. செட்டி நாடு முதல் கடலோர கர்நாடகா வரை இந்த பாயாசம் செய்யப்படுவதை பார்க்கலாம். கர்நாடாகவில் அப்பி பாயாசம் என்று கூறுவதைப் பார்க்கலாம். பூரியை கிட்டத்தட்ட பிஸ்கட் மாதிரி எண்ணேய்யில் பொரித்து சர்க்கரை கலந்து காய்ச்சிய பாலில் போட்டு பரிமாறுவார்கள். இந்த பூரி கரைந்து பாயாசத்தை திக்காக மாற்றிக் கொடுக்கும். 

சக்க பிரதமன்: கேராளவில் செய்யப்படும் மிக முக்கிய அடையாளமான உணவுகளில் இதுவும் ஒன்று. கேரளாவில் பாயாசத்தை பிரதமன் என்று சொல்வது வழக்கம். கோவில்களில் பிரசாதமாகவும் வழங்குவதைப் பார்க்கலாம்.  வெல்லம் மற்றும் தேங்காய் பாலை இரட்டை கொதிமுறையில்  வைத்து காய்ச்சி பிரதமன் செய்வதைப் பார்க்கலாம். பலாபழத்தை இந்த பாயாசத்தில் சேர்ப்பது வழக்கம். இந்த பாயாசத்தில் சிறிதளவு வாசனையான ஸ்பைசஸ் சேர்ப்பதும் வழக்கம்.

பருப்பு பிரதமன்: பருப்பை அடிப்படையாக வைத்து செய்யப்படும் பாயாசம். தேங்காய் பாலில் பாசிப்பருப்பை ஊறவைத்து செய்வது வழக்கம். 

அரிசி மற்றும் தேங்காய் பாயாசம்: தமிழ்நாடுகளில் பல வீடுகளில் செய்யப்படும் பாயாசம் அரிசி தேங்காய் பாயாசம். வித்தியாசமான சுவையில் அரிசி மற்றும் துருவிய தேங்காய் கலந்து சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். 

dqvks69o

அம்பலபுழா பாயாசம் செய்முறை

பிரபல ஹோட்டலான சாவ்ய ரஸா பாரம்பரிய தென்னிந்திய உணவு முறைக்கு மிகவும் புகழ் பெற்றது. இந்த உணவகம் புனே மற்றும் சென்னையில் உள்ளது. கேரளாவில் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் பாயாசம்.

தேவையான பொருட்கள் 

உடைத்த சிவப்பரிசி -500 கிராம்

பால் -3 லிட்டர்

சர்க்கரை -1.5 கிலோ

நெய்- 200 கிராம்

முந்திரி -100 கிராம்

செய்முறை

1. சிவப்பரிசியை கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

2. அடி கணமான பாத்திரம் அல்லது கேரளா பாத்திரமான உருலியை எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையில் கால் பங்கை எடுத்து பாகுபோல் காய்ச்சவும்.

3. சர்க்கரை கேரமல் நிறத்திற்கு வந்த பின் அதனுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து வறுக்கவும்.

4. சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரிசி 60 % வரை வேக வைக்கவும். அதன் பின் பால் ஊற்றி அரிசி மசியும் அளவிற்கு வேகவைக்கவும்.

5. பின் பாலை ஊற்றி நன்றாகக் கிளறவும்.

6. கடைசியில், மிச்சம் உள்ள சர்க்கரை கலந்து கலவை திக்காக வரும் வரை நன்றாக கலக்கவும்.

7. தொடர்ந்து கிளறிக்கொண்டே வர வேண்டும். இதுதான் நீண்ட நேர வேலையாக இருக்கும்.

8. முந்திரியை நெய்யில் வறுத்து பாயாசத்தில் ஊற்றவும். (விரும்பினால் இதை செய்யலாம், ஆனால் இது சுவை நிச்சயம் அதிகரிக்கும்) 

Disclaimer:

The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement