பட்டாணி பால்: பாலுக்கான் புதிய மாற்று

பட்டாணி பால் என்றால் என்ன? அதனால் என்ன பயன்கள் கிடைக்கின்றன? என்பது பற்றியான சில தகவல்களைப் பார்ப்போம்

Sarika Rana  |  Updated: June 25, 2018 19:13 IST

Reddit
Pea Milk: A New Non-Dairy Alternative That Tastes Nothing Like Pea
பால்-அல்லாத மாற்று உணவுகளான, அரிசி, சோயா, நட்ஸ், தேங்காய், சணல் உள்ளிட்டவற்றின் வரிசையில் புதிய வரவாக பட்டாணி பால் இணைந்துள்ளது. இது பால் அல்லாத புதிய சைவ உணவு. பட்டாணி பால் தாவரம் சார்ந்தது, மஞ்சள் பட்டாணியிலிருந்து தயாரிக்கப்பட்ட பட்டாணி புரதத்தால் செய்யப்பட்ட உணவு. சூப்பர் மார்க்கெட்டுகளில் பருத்திப் பால் இனிப்புள்ளது, இனிப்பல்லாதது, வெண்ணிலா மற்றும் சாக்லேட் சுவைகளில் கிடைக்கிறது. வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருப்பதால், சுவையான ஒரு மாற்று உணவாக அமைகிறது. 

பட்டாணி பால் என்றால் என்ன? அதனால் என்ன பயன்கள் கிடைக்கின்றன? என்பது பற்றியான சில தகவல்களைப் பார்ப்போம்.

Photo Credit: iStock

பட்டாணி பால் என்றால் என்ன? Commentsபட்டாணி பால் என்பது பிரிக்கப்பட்ட மஞ்சள் பட்டாணிகளில் இருந்து செய்யப்பட்ட பால்-அல்லாத ஒரு மாற்று உணவாகும். இது பால், சோயா, நட்ஸ் மற்றும் க்ளூடன் இல்லாத பொருள். இதில் பண்ணைப் பாலில் உள்ள அளவிலான புரதச் சத்துக்கள் இருப்பதாகவும், அதை விடவும் குறைவான அளவிலான கலோரி உள்ள பானம் எனப்படுகிறது. மேலும், இதில் டீ.ஹச்.ஏ, ஒமேகா - 3, கொழுப்பு அமிலங்களுடன் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் இரும்புச் சத்து மற்றும் புரதங்கள் இருக்கின்றன. சுவாரஸ்யமாக இதில் பட்டாணியின் சுவை இருக்காது.
 
 

A post shared by @mozzo0917 on


பட்டாணி பாலின் பயன்கள்:

  1. பட்டாணி பால், மாட்டுப் பால் போன்று அதே அளவிலான புரதங்களை அளிப்பதாக கூறப்படுகிறது. அதாவது இது சிறந்த சக்தியை வழங்கி நீண்ட நேரம் ஆற்றலுடன் வைத்து பசியிலிருந்து போக்க உதவுகிறது.
  2. பட்டாணி பால் நட்ஸ் மற்றும் க்ளூடன் இல்லாத ஒரு தாவரம் சார்ந்த மாற்றை வழங்குகிறது எனவே லாக்டோஸ் மற்றும் நட்ஸ் பிடிக்காதவர்கள் சுவையான பானமான பட்டாணி பாலிற்கு மாறிக்கொள்ளலாம்.
  3. உங்களுக்கு பட்டாணி பிடிக்கவில்லையென்றாலும், நீங்கள் அதன் சுவையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இந்த பால் பட்டாணி போன்ற சுவையோ அல்லது பச்சை நிறத்திலோ இருக்காது.சில ஆய்வுகளின் படி, பாதாம் பாலை தயார் செய்வது சுற்றுச்சுழலுக்குக் கேடு விளைவிக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் பட்டாணி மற்றும் பிற பருப்பு வகைகளான சுண்டல் மற்றும் பீன்ஸ் போன்றவைகள் குறைந்த கார்பன் அளவு கொண்டிருக்கிறது. இதை தயாரிக்க பாலை விடவும் குறைவான தண்ணீர் தேவைப்படுவதோடு மட்டுமில்லாமல் பட்டாணி நிலத்திற்கு சத்துக்களை திரும்பி அளிக்கிறது.
  4. இதில் பண்ணைப்பாலை விடவும் குறைவான அளவில் கலோரிக்கள் உள்ளது, எனவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால் இதை உங்களுடைய உணவு பழக்கத்தில் இணைத்துக் கொள்ளலாம்.
  1.  

A post shared by Pilon Verde (@pilonverde) on


பரிந்துரைகள்:
  • பெரும்பாலான பால் அல்லாத மாற்றுக்களை போன்றே, பட்டாணி பால், பண்ணைப் பாலை விட விலை மிகவும் அதிகமானது.
  • இதில் புரதம் மற்றும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருந்தாலும், பண்ணை பாலில் உள்ள குறிப்பிட்ட சில சத்துக்கள் இதில் இல்லை. என்றாலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு தான்
பால் அல்லாத மாற்று உணவு வழக்கத்திற்கு மாறுவதற்கு முன்னாக ஒரு ஊட்டச்சத்து நிபுணரை கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com